Aran Sei

இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைக்க முயலும் இன்போசிஸ் – ஆர்எஸ்எஸ் சார்பு பத்திரிகை பாஞ்சஜன்யா குற்றச்சாட்டு

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இன்போசிஸ் தொழிநுட்ப நிறுவனம் இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைக்க முயல்வதாகவும், நக்சல் மற்றும் இடது சாரிகளுக்கும் உதவி வருவதாகவும்  “தேசவிரோதி”  என்றும் ஆர்.எஸ்.எஸ் சார்புடைய பத்திரிகையான பாஞ்சஜன்யா பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது.

இன்போசிஸ் உருவாக்கிய புதிய வருமான வரி இணைய தளத்தில் உள்ள குறைபாடுகளின் பின்னணியில் பத்திரிக்கை இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இணையதளம் கடந்த ஜூன் 7 அன்றிலிருந்து செயல்பட்டு வருகிறது அப்போதிருந்து வரி செலுத்துவோருக்கு தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக்கை அழைத்து, இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை அவகாசம் அளித்திருந்தார்.
இன்போசிஸ் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை பெற்றது.

மேலும், பாஞ்சஜன்யா பத்திரிக்கையில் “”இன்போசிஸ் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் இதே போன்ற தரமற்ற சேவையை வழங்குமா” என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.

source: the indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்