Aran Sei

பாஜக ஆட்சியில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், வகுப்புவாத கலவரங்கள் அதிகரிப்பு – தெலங்கானா முதல்வரின் மகள் குற்றச்சாட்டு

ன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவின்  மகளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் தலைவர்களில் ஒருவரான கவிதா கல்வகுண்ட்லா சில கேள்விகளை அமித்ஷாவிடம் முன்வைத்துள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், “விண்ணைத் தொடும் பணவீக்கம்; நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் சாதனை படைத்துள்ளது; பாஜக அரசின் தரவுகளின்படி வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்துள்ளன; எரிபொருள் விலை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் பாஜக – அமித் ஷாவிற்கு டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் கடிதம்

மேலும், கடந்த 8 ஆண்டுகளில் தெலுங்கானாவில் ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களை தெலுங்கானாவில் மோடி அரசு அமைக்கத் தவறியது ஏன் என்பதை தெலுங்கானா மக்களிடம் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்றும் கவிதா கல்வகுண்ட்லா கேட்டுக் கொண்டார்.

மிஷன் காகத்தியா மற்றும் மிஷன் பகீரதாவுக்கு  நிதி ஆயோக் பரிந்துரைத்த ரூ. 24,000 கோடியை ஒன்றிய அரசு ஏன் நிராகரித்தது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக ஆளும் கர்நாடகாவில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தேசியத் திட்ட அந்தஸ்து வழங்கியுள்ளது. தெலுங்கானாவில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு மறுத்துள்ளது. இதன் மூலம், ஒன்றிய அரசு “கபட நாடகம்” செய்வதாகவும் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் தலைவர்களில் ஒருவரான கவிதா கல்வகுண்ட்லா குற்றம் சாட்டினார்.

source: ndtv.
தமிழ்நாடு முழுக்க அரசு Beef Biriyani திருவிழா நடத்தணும் | Sundharavalli

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்