Aran Sei

‘கேரளத்தில் மருத்துவரான பழங்குடி மாணவர்கள்’ – பலதரப்பின் ஆதரவே மருத்துவராக்கியது என மாணவர்கள் பெருமிதம்

கேரள மாநிலம் பாலக்காட்டில் பழங்குடிகள் வாழும் குக்கிராமம் அட்டப்பாடி. அங்கு பல குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகப் பலியாகியுள்ளனர். மேலும், குழந்தைப்பிறப்பும் குறைந்துள்ளது. அங்குள்ள இருளர் சமூகத்திலிருந்து கார்த்திகா ரகு, ராகுல் ராஜ் எனும் இரண்டு மருத்துவர்கள் உருவாகியுள்ளனர்.

”நான் த்ரிசூரிலிருந்து வரும் வெள்ளியன்று வருகிறேன். என்னுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், கோத்தகரா பழங்குடிகள் பல்நோக்கு மருத்துவமனையின் மருத்துவர் குரு ஆகியோர் எனக்கு உதவினர்” என்று மருத்துவர் கார்த்திகா ரகு கூறியுள்ளார். மருத்துவத்தில் முதுகலை படிக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை என்றும் கூறியுள்ளார். கார்த்திகாவின் தந்தை ராகவன் அகலியில் உள்ள காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிகிறார்.

இன்னொருவரான மருத்துவர் ராகுல் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார். ‘பலர் என் கல்விக்காக வருட கணக்கில் உதவினர்’ என்று ராகுல் கூறியுள்ளார்.

என்னுடைய தந்தை துரைராஜா ஒரு விவசாயி. என் தாயார் விஜயலட்சுமி அங்கன்வாடி ஆசிரியர் அவர்களின் ஊக்குவிப்புதான் என்னுடைய வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்தது. நான் என்னுடைய முதுகலை மருத்துவக் கல்வி படிக்க  நுழைவுத்தேர்வுக்கான வகுப்புகளில் ஈடுபடவுள்ளேன். துறை சார்ந்து பின்னர் முடிவெடுப்பேன் என்று மருத்துவர் ராகுல் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்