“மே 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 14.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாத்திற்கு பிறகான விகிதங்களில் இதுவே அதிகமானது” என இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ)தரவுகள் தெரிவிப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது
மே 16 ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், ”14.7 விழுக்காடாக இருந்த நகர்ப்புற வேலையின்மை விகிதம், கடந்த வாரத்தில் 17.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆனால் இதே காலகட்டதில் 14.3 விழுக்காடாக இருந்த கிராம வேலையின்மை விகிதம் 13.5 விழுக்காடாக குறைந்துள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 6.5 விழுக்காடு வரை அதிகரித்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது என சிஎம்ஐஇ தரவுகள் கூறுவதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மாநில அளவிலான ஊரடங்குகள் விதிக்கப்பட்டிருப்பதால், வேலையின்மை விகிதங்கள் மே, ஜூன் மாதங்களில் இன்னும் அதிகரிக்க கூடும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நாடு முழுவதிலும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தபோது வேலையின்மை விகிதம் இரட்டை இலக்கங்களை எட்டியது. அது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது இல்லை என்றாலும், செயல்பாடுகள் மிதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உள்ளூருக்குள் நகர்வுகள் உள்ளன. சமீபகாலங்களில் காணப்படும் இரட்டை இலக்க வேலையின்மை விகிதங்கள், பொருளாதாரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.” என சிஎம்ஐஇ அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.81 கோடியாக இருந்த ஒயிட்காலர் ஜாப்ஸ் எனப்படும் நிர்வாக பணியாளர்கள் எண்ணிக்கை, 2021 ஆம் ஆண்டும் எப்ரலில் 1. 38 கோடியாக குறைந்துள்ளது என மிண்ட் இணையதளம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.