Aran Sei

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது – ராகுல் காந்தி

ந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு அப்பாற்ப்பட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா இரண்டாவது பாலம் கட்டி வருவதை மேற்கோள் காட்டிய அவர், தேசத்தின் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

செயற்கைக் கோள் புகைப்படங்களை பார்க்கும் போது, கிழக்கு லடாக்கில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பாங்காங் த்சோ ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது பாலத்தைச் சீனா நிர்மாணித்து வருகிறது. இது ராணுவத்தை விரைவாக திரட்ட சீனாவிற்கு உதவும்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே மோதல் நிலவி வரும் சூழலில், இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “முதல் பாலம் கட்டப்பட்டபோது, நிலைமையைக் கண்காணித்து வருவதாக இந்திய அரசு தெரிவித்தது. தற்போது இரண்டாவது பாலம் கட்டப்படும் போதும், அதே பதிலைத் தான் இந்திய அரசு தெரிவிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

”இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு அப்பாற்ப்பட்டது. கோழைத்தனமான பணிவான நடைமுறை பலனைத் தராது. நாட்டின் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கலைஞரை வசைபாடும் சாதிவெறியர்கள் | Makizhnan | Indra Kumar | Gurumoorthy | Kalaignar | MK Stalin DMK

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்