Aran Sei

இந்தியாவில் 1% பணக்காரர்களிடம் 40% செல்வம்: அடிமட்டத்தில் உள்ள 50% மக்களிடம் வெறும் 3% செல்வம் மட்டுமே உள்ளது -ஆக்ஸ்பாம் அறிக்கை

ந்தியாவில் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம் மக்கள்தொகையில் அடிமட்டத்தில் இருரக்கும் 50 சதவீதம் மக்களிடம் ஒட்டுமொத்தமாகவே வெறும் 3 சதவீத செல்வத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தின் முதல் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் WEF அமைப்பின் உரிமைக் குழுவான ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வருடாந்திர சமத்துவமின்மை அறிக்கையின் இந்தியா அறிக்கையை வெளியிட்டது.

உலகப் பணக்காரர் வரிசை – இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் கௌதம் அதானி

ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள இந்த முக்கியமான வருடாந்திர சமத்துவமின்மை குறித்த ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் மீது 5 சதவீத வரி விதிக்கப்பட்டாலே இந்தியாவில் பள்ளிக்கு செல்ல முடியாமல் இருக்கும் பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி 2017-2021 வரையிலான காலக்கட்டத்தில் பெறப்பட்ட ஆதாயங்களுக்கு ஒரு முறை வரி விதித்தாலே 1.79 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட முடியும். இதை வைத்து நாடு முழுவதும் உள்ள 50 லட்சம் துவக்கபள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு வருட சம்பளத்திற்குப் போதுமான நிதியாக இருக்கும்.

இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்துக்கும் 2 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக 40,423 கோடி ரூபாய் அளவிலான தேவைப்படும் நிதியை திரட்ட முடியும் எனச் ‘சர்வைவல் ஆஃப் தி ரிச்சஸ்ட்’ என்ற அறிக்கையில் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளது ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்.

நாட்டில் உள்ள டாப் 10 கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் மீது ஒரு முறை 5 சதவீத வரி விதிக்கப்பட்டால் 1.37 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியும். இது 2022-23 ஆம் ஆண்டிற்குச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ரூ. 86,200 கோடி) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் (ரூ. . 3,050 கோடி) மதிப்பிட்டுள்ள நிதி தேவையை விட 1.5 மடங்கு அதிக நிதியை திரட்ட முடியும்.

இந்தியாவில் ஒரு ஆண் ஊழியர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் பெண் தொழிலாளர்கள் 63 பைசா மட்டுமே சம்பாதிப்பதாக ஆக்ஸ்பாம் அறிக்கை பாலின சமத்துவமின்மை குறித்து தெரிவித்துள்ளது.

‘விலைவாசி உயர்வில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஹனுமான் சாலிசா பாடுகிறார்கள்’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஊதிய வித்தியாசம் இன்னும் அதிகமாக உள்ளது. உயர் சமூகக் குழுக்கள் சம்பாதிக்கும் பணத்தில் பட்டியலிடப்பட்ட சாதியினர் 55 சதவிகிதம் மட்டுமே சம்பாதித்தது வருகின்னர். 2018 மற்றும் 2019 க்கு இடையில் நகர்ப்புற தொழிலாளர் வருவாயில் 50 சதவீத பணத்தை மட்டுமே கிராமப்புறத் தொழிலாளர்கள் சம்பாதித்தனர்.

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நவம்பர் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு நாளுக்கு 3,608 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்று ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு 102 ஆக இருந்த பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 2022ம் ஆண்டு 166 ஆக அதிகரித்திருக்கிறது.

சமத்துவமின்மையை கையாள்வதற்கு இதுதான் மிகச்சரியான வழி. எனவே பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி, பரம்பரை வரி போன்ற முற்போக்கான வரியை விதிக்க நாங்கள் நிதியமைச்சரை வலியுறுத்துகிறோம். கடந்த 2012 முதல் 2021 வரை என 11 ஆண்டுகளில் ஏராளமான செல்வம் இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 40% செல்வம் 1 சதவிகித பெரும் பணக்காரர்களும், வெறும் 3% செல்வத்தை 50 சதவிகித சாமானிய மக்களும் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்கள். வரி விதிப்பை பொறுத்த வரையில் பணக்காரர்களைவிட சாமானியர்களிடமும், நடுத்தர மக்களிடமும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.

Source : BBC

Ground Report | Pudukottai vengaivayal dalit water tank issue | @rootstamil Karikalan Interview

Ground Report | Pudukottai vengaivayal dalit water tank issue | @rootstamil Karikalan Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்