Aran Sei

இந்தியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் வருத்தம்

ந்தியாவின் கொரோனா நிலைமை பெரிதும் கவலையளிக்கிறது, பல மாநிலங்கள் தொடர்ந்து கவலையளிக்கும் எண்ணிக்கையிலான நோயாளிகள், உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

தொற்று நோயின் இரண்டாவது ஆண்டு உலகளவில் முதலாம் ஆண்டைவிட ’மிகவும் கொடியதாக’ இருக்கும் என எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றை சமாளிக்க உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து உதவி வருவதாக தெரிவித்துள்ள கெப்ரேயஸ், ஆக்சிஜன் செறிவூட்டிகள், நடமாடும் கள மருத்துவமனைகளுக்கான கூடாரங்கள், முககவசங்கள் மற்றும் பிற மருத்துவ பொருட்கள் அனுப்பபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அறுவடைக்குப் பின் போராட்டக்களம் திரும்பிய விவசாயிகள் – கொரோனா பரப்புவதாக எழும் அவதூறுகளுக்கு விவசாய சங்கம் கண்டனம்

”பல மாநிலங்களில் தொடந்து கவலையளிக்கும் எண்ணிக்கையில் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிப்பது, உயிரிழப்புகள் ஏற்படுவது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் பொது இந்தியாவின் நிலைமை பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

”இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அவசரநிலை போன்ற சூழ்நிலை இந்தியாவில் மட்டுமல்ல என்பதை சுட்டிகாட்டியுள்ள கெப்ரேஸ், நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, எகிப்து ஆகிய நாடுகளில் மருத்துமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்