Aran Sei

‘மோடியின் நிர்வாகத் திறமையின்மையும் திட்டமின்மையும்தான் இந்தியாவின் அவல நிலைக்கு காரணம்’ – டைம் நாளிதழ்

ந்தியாவில் கொரோனா நெருக்கடி கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது என பிரபல ஆங்கில நாளிதழான டைம் இதழ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிருக்கும் கட்டுரைகளில், கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை குறித்தும், மோடி நிர்வாகத்தின் தோல்விகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றழைக்கப்படும் நாட்டில், வெகுஜன மரணங்கள் தற்போது தவிர்க்க முடியாதவை என்றும், பிபிஇ கிட்கள் மற்றும் மருத்துவ உதவி கேட்கும் பதிவுகளாக சமூக ஊடகங்கள் நிரம்பி இருப்பதாக டைம் தெரவித்துள்ளது.

கொரோனா பரவலால் ‘சார் தாம்’ புனித யாத்திரைக்கு தடை – உத்தரகண்ட் முதலமைச்சர் அறிவிப்பு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு சிறிய தகனகூடத்தில், ஒரே நேரத்தில் 7 உடல்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. காற்றில் எங்கும் எரியும் உடல்களின் வாடை பரவி இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”நான் பிறந்ததிலிருந்து இந்தப் பகுதியில் வசித்து வருகிறேன். தினமும் குறைந்தபட்சம் இரு முறையாவது  இந்தப் பகுதியைக் கடக்கிறேன். ஆனால், இத்தனை உடல்கள் ஒரே நேரத்தில் எரியூட்டப்படுவதை கண்டதில்லை” என அந்தப் பகுதியைச் சேர்ந்த கவுரவ் சிங் தெரிவித்துள்ளதாக டைம் இதழ் கூறியுள்ளது.

ஆக்சிஜன் அளவு குறைந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அறிக்கையைக் கோரும் மருத்துவமனைகள், அது இல்லாததால் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றன. இதனால் உயிரிழப்புகள் அதிகரிப்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஃபைசர் தடுப்பூசியை முன்கூட்டியே அனுமதித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்’ – எழுத்தாளர் சேத்தன் பகத்

அரசின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்திருப்பதாக கூறும் உத்திரபிரதேசத்தில் சுகாதாரப் பணியாளராக பணிபுரியும் கான்சன் பாண்டே, ”எங்களுக்குக் குறைந்தபட்ச முககவசமும் கையுறையுமாவது கொடுங்கள். எங்களுக்கு உயிர்களுக்கு மதிப்பில்லையா?.” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனாவை வெற்றிகரமாக கையாண்டதாக மோடிக்கு வாழ்த்து கூறி, பாஜகவினர் தீர்மானம் நிறைவேற்றியதை விமர்சித்துள்ள டைம் இதழ், இந்தியாவின் பாதிப்புகளுக்கு மோடி அரசின் நிர்வாகத் தோல்வியும், சரியான திட்டமிடல்கள் இல்லாததும் காரணம் என குற்றம்சாட்டியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்