Aran Sei

வரி மற்றும் வலதுசாரி அரசியலால் இந்தியாவை விட்டு வெளியேறும் செல்வந்தர்கள் – பிபிசி

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் இந்தியாவை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான செல்வந்தர்கள் வெளிநாடுகளில் குடியேறி வருகின்றனர்.

டெல்லியில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை நடத்தி வரும் ராகுல், 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிக் குடும்பத்துடன் துபாயில் குடிபெயர்ந்துள்ளார். மேலும் கரீபியன் திவுகள் ஒன்றில் குடியுரிமையும் பெற்றுள்ளார்.

”நாங்கள் வெளியேறப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையானது, வருமான வரித்துறை அதிகாரிகள் அளிக்கும் தொல்லைகள் தான். மேலும், இந்தியாவில் இருக்கும் வலது சாரி அரசியலும் மற்றுமொரு காரணம். இந்தப் பிரித்தாளும் அரசியலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற சூழ்நிலையில் என் குடும்பம் வாழ்வதை நான் விரும்பவில்லை” என ராகுல் தெரிவித்துள்ளார்.

பார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி – ஆதவன் தீட்சண்யா

2018 ஆம் ஆண்டில், மார்கன் ஸ்டான்லி நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் கோடீஸ்வரர் அந்தஸ்தில் உள்ள சுமார் 23 ஆயிரம் தனிநபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். உலகின் மற்ற நாடுகளைவிட இது மிகவும் அதிகம் என தரவுகள் தெரிவிக்கிறது.

அயல்நாட்டில் எளிமையான நடைமுறைகள், இந்தியாவின் கடுமையான வரித்திட்டங்கள் ஆகியன இதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இவ்வாறாக வெளியேற விரும்பும் செல்வந்தர்கள் மால்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகளில் முதலீடு செய்வதன் வழியாக அந்நாட்டில் குடியுரிமை பெற முயற்சித்து வருகின்றனர்.

ஆஞ்சநேயர் பிறந்த இடம் கர்நாடகமா, ஆந்திரமா? – மாநிலங்களுக்கிடையில் எழுந்துள்ள சர்ச்சை

வெளிநாட்டில் குடியேறுவதற்கு உதவி புரியும் நிறுவனங்களில் ஒன்றான ஹென்லி & பார்டனர்ஸ் நிறுவனம், 2019 ஆம் ஆண்டு, இந்தியாவில் தனது சேவையைத் தொடங்கியது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் அந்த நிறுவனத்திற்கான தேவை அதிகரித்திருக்கிறது.

“கொரோனா இரண்டாவது அல்லது மூன்றாவது அலைவரை காத்திருக்க வேண்டாமென அவர்கள் (செல்வந்தர்கள்) யோசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் தற்போது வீட்டிலேயே இருப்பதால், இதற்கான நேரம் கிடைக்கிறது. இதனைக் காப்பீட்டு கொள்கை அல்லது பிளான் பி என நாங்கள் கூறிகிறோம்” என அந்நிறுவனத்தை சேரந்த டோமினிக் வோலெக் தெரிவித்துள்ளார்.

வாக்குப் பதிவின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – விசாரணை நடத்தப்படும் என மம்தா அறிவிப்பு

இத்தகைய பெரும் தொகை இந்தியாவை விட்டு வெளியேறுவது நிரந்தமில்லை என்றாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது உகந்தது அல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இலகுவான வர்த்தக சூழலுக்கான நடவடிக்கைகளை அரசு உடனே எடுப்பது தான் செல்வந்தர்கள் இந்தியாவில் தொடர்ந்து வசிப்பதற்கான ஒரே வழி என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Source : BBC

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்