Aran Sei

இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்த உக்ரைன் – ரஷ்ய அதிபர் குற்றச்சாட்டு

கார்கிவ் ரயில் நிலையத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் பணயக்கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

“உக்ரைனில் கல்லூரி படிப்பிற்குச் சென்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மக்களை உக்ரைன் அரசு பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்கள். கார்கிவ் ரயில் நிலையத்தில் 3,179 இந்திய மக்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். கார்கிவ் நகரத்தை விட்டு வெளியேற விரும்பிய சீன குடிமக்கள் மீது நாஜி இன வெறியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இருவர் காயமடைந்துள்ளனர். ‘நூற்றுக்கணக்கான’ வெளிநாட்டுக் குடிமக்கள் கார்கிவ் நகரத்தை விட்டு வெளியேறுவதை உக்ரேனியப் படைகள் தடுக்கிறார்கள்” என்று ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் உரையின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

‘இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்படவில்லை’ – ரஷ்யாவின் குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளியுறவுத்துறை

நேற்று (மார்ச் 3) உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்திருந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட நிலையில் எந்தவித உடன்பாடும் இதுவரையில் எட்டப்படவில்லை என்று உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறியுள்ளார்.

உக்ரைன் போர்: ‘நவீனின் உடலுக்கு பதிலாக 10 பேரை விமானத்தில் கொண்டுவரலாம்’ –பாஜக எம்எல்ஏ

கார்கிவ் நகரத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நாங்கள் அறிவுரை வழங்கினோம். இதைத் தொடர்ந்து சுமார் 1000 மாணவர்கள் வெளியேறி, தற்போது அருகிலுள்ள நகரமான பிசோச்சினில் உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

ஆனால் கார்கிவ் நகரில் மீண்டும் போர் தொடங்கியுள்ளதால், அந்நகரின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளிலும், அருகிலுள்ள பகுதிகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

Source : the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்