Aran Sei

பாகுபாடு காட்டும் உக்ரைனிய அதிகாரிகள் – இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு, இன்று (பிப்ரவரி 28) காலை, டெல்லி வந்திறங்கிய இந்திய மாணவர்கள், “போர் தாக்குதல்களுக்கு பயந்து தப்பிச் செல்ல முயலும் இந்தியர்களிடம் உக்ரைனிய அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து பிரவீன் குமார் என்ற மாணவர் ஒருவர் கூறுகையில், “இந்தியர்கள் மற்றும் நைஜீரியர்கள் உக்ரைன் எல்லையை தாண்ட அனுமதிக்கப்படவில்லை. ஆனால், உக்ரைனிய அதிகாரிகள் தங்கள் சொந்த மக்களை மட்டும் அனுமதிக்கிறார்கள். எல்லையை அடைய நாங்கள் சுமார் 15 கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

சொந்த மக்களை நாம் கைவிட முடியாது: உக்ரைன் ராணுவத்தால் தாக்கப்படும் இந்திய மாணவர்கள் குறித்து ராகுல் காந்தி கருத்து

மற்றொரு மாணவர் சுபம் குமார் கூறுகையில், “வெளியேற்ற பணியில் நிறைய குழப்பம் உள்ளது. உக்ரைனில் இன்னும் பல இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அங்கு இப்போது முக்கிய பிரச்சனையாக இருப்பது உக்ரைன் எல்லையை கடப்பதுதான். உக்ரைன் – போலாந்து எல்லையில் உக்ரைன் காவலர்களால் இந்திய மாணவர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போர் தாக்குதல்களில் இருந்து தங்களை உயிர்காத்துக்கொள்ள, உக்ரைன் எல்லை சோதனை சாவடிகளில் மைனஸ் 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் தங்கியிருக்கிறார்கள் என்று டெல்லி வந்திறங்கிய இந்திய மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்