நாங்கள் உக்ரைனை விட்டு வெளியேற முயன்றபோது, ரயில் நிலையத்தில் அந்நாட்டு காவல்துறை மற்றும் இராணுவத்தால் தாக்குதலுக்கு ஆளானதாக கார்கிவ் நகரில் இருந்து வந்த மூன்று இந்திய மாணவர்கள் கூறியுள்ளனர்.
இம்மூன்று மாணவர்களும் உக்ரைனில் இருந்து போலாந்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து இந்தியா திரும்பவுள்ளனர். இந்நிலையில், தற்காலிகமாக போலாந்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அம்மாணவர்கள் நேற்று (மார்ச் 3) என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், கார்கிவ் நகரை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் காலதாமதமாக ஆலோசனை வழங்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உக்ரைன் போர்: ‘நவீனின் உடலுக்கு பதிலாக 10 பேரை விமானத்தில் கொண்டுவரலாம்’ –பாஜக எம்எல்ஏ
இந்திய தூதரகத்தின் இந்த ஆலோசனையை அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தங்கள் குடிமக்களுக்கு கூறியதாக அம்மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“தூதரகம் இந்த ஆலோசனையை ட்வீட் செய்வதற்கு பல மணி நேரம் முன்பே கார்கிவ் நகரை விட்டு நாங்கள் வெளியேற தொடங்கிவிட்டோம். உக்ரைனில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினமாக இருந்தது. கார்கிவ் ரயில் நிலையத்திற்கு 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றோம். உக்ரைன் காவலர்களின் தாக்குதல்களையும் தாண்டி ரயில் நிலையத்தை அடைந்தோம். அவர்கள் உக்ரேனியர்களை மட்டும் அனுமதித்தனர். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களை முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கிறார்கள். ஆனால், இந்தியர்களை அனுமதிக்கவில்லை” என்று கூறியுள்ளனர்.
“அதன்பிறகு சில பெண்களுக்கு மட்டும் அனுமதி அளித்தார்கள். பிறகு, எங்களை அனுமதிக்க காவலர்கள் லஞ்சம் கேட்டனர். டிக்கெட் வேண்டுமானால் ஒவ்வொருவரும் 200 டாலர்கள் தர வேண்டும் என்றார்கள். இரவில் நாங்கள் ரயில் நிலைய நடைமேடையிலேயே தங்கினோம். இரவு நீங்கள் இங்கு தங்க வேண்டுமானால் அதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் என்றனர். அப்போது, குடிபோதையில் இருந்த காவலர்கள், எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர்” என்று அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Source: NDTV
தொடர்புடைய பதிவுகள்:
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.