அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து 78 ரூபாய் 59 காசுகளானது. நேற்று வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து 78 ரூபாய் 37 காசுகளில் நிறைவடைந்திருந்தது. நிதிச் சந்தைகளில் இருந்து தொடர்ந்து அந்நிய முதலீடுகள் வெளியேறி வருவதே ரூபாய் மதிப்பு சரிவதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியப் பங்குச் சந்தைகளும் இறக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
பிப்ரவரி 2022 இறுதியில், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியபோது, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 முதல் 74 ஆக இருந்தது. அதன் பின்னார் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்தது. தற்போது 78 ரூபாயாக சரிவை சந்தித்துள்ளது.
காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 358 புள்ளிகள் சரிந்து 52,803 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 104 புள்ளிகள் இறங்கி 15,727 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 116 டாலரில் வர்த்தகமாகியது.
source: Puthiyathalaimurai
Justice Loya வழக்கில் Amit shah சிறை செல்வது உறுதி | Piyush Manush | Teest Setalvad Arrest
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.