Aran Sei

காவிரிப்படுகையில் எண்ணெய் எரிவாயு குழாய்கள் அமைக்கும் இந்தியன் ஆயில் – தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை

காவிரிப்படுகையில் எண்ணெய் எரிவாயு குழாய்கள் அமைக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டின் பல பகுதிகள் மட்டுமன்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் முயற்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் இறங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

செப்.17 வேளாண் திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட நாள் – கறுப்பு தினம் அனுசரிக்க ஆம் ஆத்மி முடிவு

காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குழாய்களை அமைக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருவது கடுமையான ஆட்சேபனைக்கு  உரியது என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வலியோடு முறிந்த மின்னல் – கவிஞர் ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா மறைந்தார்

தஞ்சாவூர், நாகப்பட்டணம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம் என ஏழு மாவட்டங்களில் 14 வட்டங்களில் எழுபத்தி ஏழு ஊர்களில் உள்ள ஏராளமான விவசாயிகளின் வயல்களில் எண்ணெய் எரிவாயு குழாய் பதிக்க உள்ளதாக பத்திரிக்கைகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த செப்டம்பர் 3ம் தேதி அறிவிப்பு வெளியிட்டதை நினைவு படுத்திய அவர், “இருபத்தி ஏழு நாட்களுக்குள் நில உரிமை மாற்றம் உள்ளவர்கள் மட்டும் தெரிவிக்கலாம் என்று கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபணைகளை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்படவில்லை. தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாத செயலை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். .ஜவாஹிருல்லா தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்