Aran Sei

தாலிபான் துணைப்பிரதமரைச் சந்தித்த இந்திய அதிகாரிகள் – தலிபான் அரசுடன் நட்பு பாராட்டுமா இந்தியா?

ப்கானிஸ்தானின் நிலை குறித்து ரஷ்யாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் சென்ற இந்தியாவின் சிறப்புக் குழு, தாலிபான் அரசின் துணைப் பிரதமர் பிரதமர் அப்துல் சலாம் ஹனாபியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகள், விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, ஆப்கானை தலிபான்கள் எளிதாக கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அங்கு தலிபான்கள் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

‘வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவவாதிகள்’ – கர்நாடக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தும் மாற்றத்திற்கான சட்ட கூட்டமைப்பு

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவும் தாலிபான்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்தியாவும் கூட இதுவரை தாலிபான்களை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் ஆப்கனில் அமைதியான சூழலை உருவாக்கும் வகையில் ரஷ்யா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆப்கன் நிலை குறித்து விவாதிக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ரஷ்யா ஏற்பாடு செய்திருந்தது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை இந்தியா உட்பட 10 நாடுகள் பங்கேற்றிருந்தது.

‘காஷ்மீரில் மீட்டெடுத்ததாக கூறிய அமைதி எங்கே?’- பாஜகவிற்கு ஃபரூக் அப்துல்லா கேள்வி

ரஷ்யாவின் அழைப்பைத் தொடர்ந்து இந்தியா சார்பில் சிறப்புக் குழு ஒன்று இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தது. அப்போது பாகிஸ்தான்- ஆப்கன்- ஈரான் நாடுகளுக்கான இந்திய இணைச் செயலாளர் ஜே.பி.சிங், தாலிபான் அரசின் துணைப் பிரதமர் பிரதமர் அப்துல் சலாம் ஹனாபியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆப்கனில் அமைதியான ஆட்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்தியப் பிரதிநிதிகள் உறுதி அளித்தனர். மேலும் ஆப்கனுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்ததாகத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

மாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 10 நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. இந்தியாவும் கையொப்பமிட்ட அந்த கூட்டறிக்கையில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசைத் தாலிபான்கள் உருவாக்க வேண்டும் என்றும் போதைப் பொருளைக் கட்டுப்படுத்தவும் பயங்கரவாதிகள் ஒடுக்கவும் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை மேம்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “ஆப்கனில் அமைந்துள்ள தாலிபான் ஆட்சியைச் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி, அங்குள்ள புதிய யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆப்கானுக்குச் சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெறும் நோக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த பேச்சுவார்த்தையை ரஷ்யா நடத்தி வருகிறது. இருப்பினும், இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா பங்கேற்கவில்லை.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்