Aran Sei

‘ஒன்றிய சுகாதாரத்துறை தூக்கத்திலிருந்து எழுந்து, தொற்றுக்கு எதிராக போராட வேண்டும்’ – இந்திய மருத்துவர் சங்கம்

ந்திய மருத்துவர் சங்கம் மற்றும் துறைசார் வல்லுநர்களின் கூட்டு உணர்வையும், செயல்திறன்மிக்க அறிவாற்றலையும் கோரிக்கைகளையும் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு, கள நிலவரத்தை உணராமல் ஒன்றிய அரசு முடிவுகளை எடுக்கின்றது என்று இந்திய மருத்துவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “சுகாதாரத்துறை அமைச்சகம் தூக்கத்திலிருந்து எழுந்து, பரவி வரும் கொரோனா தொற்றால் ஏற்படும் சவால்களைத் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் ஏற்படும் வேதனையான நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் சுகாதாரத்துறை அமைச்சகம் காட்டி வரும் சோம்பலையும் பொருத்தமற்ற செயற்பாடுகளையும் கண்டு நாங்கள் வியப்படைகிறோம்.” என்று இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

‘தவறான அரசியலும் தவறான ஆட்சியும்தான் மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணம்’ – இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கருத்து

“முழுமையான, நன்கு திட்டமிடப்பட்ட தேசிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று, கடந்த 20 நாட்களாக இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் துறைசார் வல்லுநர்களின் கூட்டு உணர்வையும், செயல்திறன்மிக்க அறிவாற்றலையும் கோரிக்கைகளையும் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு, கள நிலவரத்தை உணராமல் ஒன்றிய அரசு முடிவுகளை எடுக்கின்றது.” என்று அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

“இருப்பினும், ஊரடங்கை அமல்படுத்த ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. இதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் நான்கு லட்சத்திற்கும் மேலான கொரோனா தொற்றுகள் பரவி வருகின்றன. மேலும், தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரித்து வருகிறது. அவ்வப்போது அறிவிக்கப்படும் இரவு நேர ஊரடங்குகளால் எந்த நன்மையும் விளையவில்லை. பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் விலைமதிப்பற்றது.” என்று இந்திய மருத்துவர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பதஞ்சலி மருந்து குறித்து ஹர்ஷவர்தன் விளக்கமளிக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் சங்கம்

மேலும், கொரோனா தடுப்பு மருந்துகளின் வெவ்வேறு விலை நிர்ணயங்களை அக்சங்கம் கண்டித்துள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்