Aran Sei

ஆஸ்கர் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ‘சர்தார் உத்தம்’ – ஆங்கிலேயர்கள் மேல் வெறுப்பை விதைப்பதாக தேர்வுக்குழு விளக்கம்

ஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்கும் இந்திய படங்களுக்கான பட்டியலில் இருந்து பாலிவுட் திரைப்படமான ‘சர்தார் உத்தம்’ நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பதனால், இந்தப் படத்தைத் தேர்வு செய்யவில்லை என தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் மைக்கெல் ஒ டையரை கொலை செய்த சுதந்திர போராட்ட வீரர் சர்தார் உத்தம் சிங்கின் வாழ்க்கையை இயக்குநர் சூஜித் சிர்கார் படமாக்க பதிவு செய்துள்ளார்.

மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது – திருமாவளவன்

இந்த படம் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து தெரிவித்துள்ள திரைப்பட இயக்குநரும் இசை அமைப்பாளருமான இந்திரதிப் தாஸ் குப்தா, “சர்தார் உத்தம், ஜாலியான வாலா பாக் சம்பவம்குறித்து வீணாகவும் நீளமாகவும் உள்ள படம் ” என தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்திய சுதந்திர போராட்டத்தின் உண்மையான ஒரு போராளியின் வாழ்க்கையை நேர்மையாக படம் பதிவு செய்திருக்கிறது. ஆனால் அது படமாக்கப்பட்ட விதத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்துள்ளது. இன்றைய உலகமயமாக்கல் உலகில், இத்தகைய வெறுப்பை கடைபிடிப்பது நியாயமற்றது”. என அவர் கூறியுள்ளார்.

இந்திய திரைப்படங்களின் தயாரிப்பு மேற்பார்வையாளர் சுமித் பாசு, “மக்கள் பலருக்கும் ‘சர்தார் உத்தம்’ ஒரு திரைப்படமாக பிடித்துள்ளது. அதன் கேமரா, எடிட்டிங், சவுண்ட் மற்றும் அந்தக் காலத்தைப் பிரதிபலித்த விதம் ஆகியவை சிறப்பாக இருந்தன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இருமாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படும்’- பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்

”எனக்குப் படத்தின் நீளம் தான் பிரச்னை என தோன்றுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் தாமதமாக வருகிறது. ஜாலியன் வாலா பாக்கில் உயிரிழந்தவர்களின் வலி பார்வையாளர்களுக்குப் புரிய வர சிறிது நேரம் எடுக்கும்” என அவர் கூறியுள்ளார்.

இந்திய மாணவர் சம்மேளனத்தின் இணைச் செயலாளர் தீப்சிதா தார், “இந்தப் படம் ஏகாதிபத்தியத்தின் மீது தான் வெறுப்பை விதைக்கிறது. எந்த குறிப்பிட்ட இனத்தின் மக்கள்மீதும் அல்ல. இந்தப் படம் இந்திய சுதந்திர போராட்டம் பற்றியது. நம் புரட்சியாளர்கள், சுதந்திரத்திற்கான எந்த அளவிற்கு சென்றார்கள். ஆனால், நாம் அவர்களுக்கு என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா, “நான் இன்னும் ‘சர்தார் உத்தம்’ திரைப்படைத்தை பார்க்கவில்லை. ஆனால், படத்தை ஆஸ்கர் தேர்வுக்கான போட்டியில் இருந்து நிராகரித்திருப்பது உள் அர்த்தம் உடையதாக தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “படத்தை நிராகரித்தவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். சர்தார் உத்தம் போன்றவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் தியாகச் சின்னங்கள். அவர்களை கைவிட முடியாது” என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா குறிப்பிட்டுள்ளார்.

Source : Independent.co.uk

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்