Aran Sei

அரசாங்கத்தை விமர்சிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டுத் தாக்கப்படுகின்றனர் – மனித உரிமைகள் குறித்த அமெரிக்க அறிக்கை தகவல்

ந்திய அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுவதுடன், உடல்ரீதியாகத் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் சுயாதீன ஊடகங்களால் மட்டுமே சுதந்திரமாக இயங்க முடிந்தது என்று மனித உரிமைகள் குறித்த அமெரிக்க அறிக்கை தெரிவித்துள்ளது.

‘கடந்த 10 ஆண்டுகளில் 278 ஊடகவியலாளர்கள் படுகொலை’ – ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 12 வது இடம்

“செய்தி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, விளம்பரங்கள் கொடுப்பவர்களைக் குறிவைப்பது, தேவையில்லாத வழக்குகளில் மாட்டி விடுவது, சில பகுதிகளில் தகவல் தொடர்பு சேவைகளைத் துண்டிப்பது, அலைபேசி, இணையத்தைத் துண்டிப்பது ஆகியவற்றின் வழியாக முக்கியமான ஊடக நிறுவனங்களை மிரட்டப்படுவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஊடகங்களுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பத்திரிக்கையாளர்களுக்கு எதிராகத் தேவையில்லாத வழக்குகள் பதியப்படுகின்றன என்று மனித உரிமைகள் குறித்த அமெரிக்க அறிக்கை தெரிவித்துள்ளது.

எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட உலக பத்திரிக்கை குறீட்டு பட்டியல் – பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் தலைவர்கள் பட்டியலில் மோடியின் பெயர்

சமூக ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. இணையச் சுதந்திரத்தில் நிறையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளுக்கான நிதியுதவி, செயல்பாடுகள்மீது அதிகப்படியான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

அகதிகளை மீண்டும் அவர்களின் நாடுகளுக்கே திருப்பி அனுப்புதல், தீவிரமான அரசாங்க ஊழல், உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அரசே துன்புறுத்தல் செய்வது மற்றும் பாலின ரீதியிலான வன்முறையை விசாரிக்காமல் விடுவது, சிறுபான்மையினரின் மீதான பாகுபாடு மற்றும் வன்முறை, குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் ஆகியவை 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த முக்கியமான மனித உரிமை மீறல்கள் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Source : NDTV

பீஸ்ட் படமும் இஸ்லாமிய வெறுப்பும். மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்