Aran Sei

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் – மாறுபட்ட தகவல்களால் குழப்பத்தை ஏற்படுத்து ஒன்றிய அரசு.

க்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அங்குச் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை மாறுப்பட்ட தகவல்களை தெவித்து ஒன்றிய அரசு குழப்பி வருகிறது.

ஆபரேஷன் கங்கா என்ற ஹேஷ்டேகுடன் சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகங்களின் இணையமைச்சர் வி.கே.சிங் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “அனைவரும் இருக்கும் இடத்திலேயே இருங்கள், யாரும் எங்கும் செல்ல வேண்டாம். பதட்டமடையாதீர்கள். உங்கள் நாடு உங்களை பத்திரமாக மீட்கும், ஜெய் ஹிந்த்” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய அமைச்சகம் இதற்கு முழுவதுமாக மாறுபட்ட கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், “கிவ் பகுதியில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு ஆலோசனை. கிவ் பகுதியில் இருக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களும் உடனடியாக கிவ் நகரத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரயிலோ அல்லது வேறு ஏதோ ஒரு வாகனமோ கிடைப்பதை வைத்து முதலில் வெளியேறுங்கள்” என பதிவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் மற்றும் இந்திய தூதரகத்தின் இரு வேறு கருத்துக்களால் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கார்கிவ் பகுதியில் இருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலையம் வந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய இளைஞர் நவீன், அங்கு ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்து விட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்