Aran Sei

இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்ட தமிழக படகுகள் – 60 படகுகள் சேதம்

ந்திய மீனவர்களின் சுமார்  60 மீனவப் படகுகளை இலங்கை கடற்படையினர்  கற்களை வீசி நேற்றைய தினம் சேதப்படுத்தியுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு கட்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 25 படகுகளின் மீன் வலைகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள மீனவசங்க பிரதிநிதி எம்ரித் , மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தீர்வுக் காணப்படவேண்டுமென கோரியுள்ளார்.

இதுதொடர்பாக, மீன்வளத்துறை உயர் அதிகாரிகளிடம் புகாரும்  அளிக்கப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்