Aran Sei

அமெரிக்க தடையை மீறி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா – இறக்குமதியை அதிகரிக்கவும் முடிவு

ஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையையும் மீறி, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அதிகரித்துள்ளன.

உக்ரைனின் ராணுமயமாக்கலை நிறுத்துவதாகவும், அந்நாடு நாஜிமயமாவதை தடுப்பதாகவம் கூறி, ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

அமெரிக்காவின் தடையால் ரஷ்யா சில பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதனை சரி செய்யும் விதமாக எண்ணெய் ஏற்றுமதியை அந்நாடு அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய தயார் -ஈரான் தூதர் அலி செகெனி

இதன் ஒரு பகுதியாக கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் விற்க ரஷ்யா முன்வந்து. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 20 முதல் 25 அமெரிக்க டாலர் வரை தள்ளுபடி விலையில், 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை வாங்க கடந்த வாரம் இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளநிலையில், 20 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்ய ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு 1.2 கோடி பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் தடையை மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், அது இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிறுத்தும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் சூழல் – $100 மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

அமெரிக்காவிடம் அதிக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளாதல், அமெரிக்க தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் முயலவில்லை. தடையை மீறும் பட்சத்தில், அமெரிக்காவுடனான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிப்பை சந்திக்கும் என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்