Aran Sei

இந்திய கிரிக்கெட் வீரருக்கு நிகழ்ந்த தாக்குதல்: இனவெறிக்கெதிராக ஒன்றிணைந்த ஆஸ்திரேலிய வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்றாம் டெஸ்ட் தொடரின் மூன்று மற்றும் நான்காம் நாள் போட்டி சிட்னியில் நடந்தது அப்போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் சீராஜ், சுழற்பந்து வீச்சாளர் பூம்ரா ஆகியோரைப் பார்வையாளர்கள் குரங்கு, நாய் போன்ற வசைச்சொற்களால் இனவெறி துஷ்ப்பிரயோகம் செய்துள்ளனர். அதன் விளைவாக இந்தியா கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது.

விமான நிலைய தனியார் மயமாக்கலில் அதானி ஆதிக்கம் – மத்திய அரசு உடந்தையா?

சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், காணொளி மூலம் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “இந்திய வேகப்பந்து வீச்சாளர் சீராஜ் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான இனவெறி தாக்குதலுக்கு புகாரளித்து சரியான ஒரு புதிய தொடக்கத்தை தந்திருக்கிறார்கள். கிரிக்கெட் என்பது அனைவருக்குமான விளையாட்டே தவிர, எந்தவொரு இனவெறி துஷ்ப்பிரயோகம் செய்யவும், வன்முறை நிகழ்த்துவதற்கான இடமல்ல, பார்வையாளர்கள் குரங்கு, நாய் போன்ற வசைச் சொற்களால் எதிர் அணி விளையாட்டு வீர்ர்களை அழைப்பது விளையாட்டாக எண்ணலாம், ஆனால் அவர்களை பாதிக்கிறது” என்று கூறியுள்ளார்.

தற்போது மைதானத்தை சுற்றியும் கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு பலத்த பாதுகாப்பு தருவதாகவும், பாதுகாவலர்களை அழைத்து, வசைச்சொற்களால் பேசியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

விவசாயிகளுடன் இன்று 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை – துளியும் நம்பிக்கையில்லை என்று விவசாயிகள் கருத்து

மேலும், “இதுபோன்ற பிரச்சனைகளைப் புகாரளிக்க முன்னுரிமை தரவேண்டும். உண்மையிலே அது மிகவும் அருவருக்கதக்க விஷயம். ஏனென்றால் இங்கிலாந்து, நீயூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நானும் இதுபோன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப் பட்டிருக்கிறேன். இது போன்ற தாக்குதல்கள் எங்கு நடந்தாலும், கிரிக்கெட் அதற்கான தளமல்ல, ஒரு விளையாட்டு வீரராக இது போன்ற அராஜகங்களை தடுக்க முயற்சி செய்ய வேண்டும்” என்றும் நாதன் கூறியுள்ளார்.

இவ்வாறு இனவெறி தாக்குதலுக்கு ஆளாகும் போது வீரர்கள், பாதுகாவலர்களை அழைத்து நடவடிக்கை எடுக்க நேரம் கொடுத்தால் நான்றாக இருக்கும் என்றும், இதுவே பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க ஊக்கமாக இருக்கும் என்றும் ஆஸ்த்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியுள்ளார்.

‘சிஏஏ போராட்ட வீடியோக்கள் வேண்டும்’ – சிறையில் உள்ள ஜேஎன்யூ மாணவி கலிதா மனுதாக்கல்

மக்கள் விளையாட்டை பார்க்க வருவார்கள், போவார்கள், அதனால் வீர்ர்கள், பார்வையாளர்கள் இனவெறி துஷ்பிரியோகம் செய்வது குறித்து, கவலைபட வேண்டாம், இது போன்ற விசயங்களிலிருந்து நாம் கடந்து வரவேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். டிராவில் முடிந்த நான்காம் நாள் போட்டின் முடிவில், சீராஜ் இனவெறி தாக்குதல் குறித்து பூகார் அளித்தது தெரியவந்த பின் ஆஸ்திரேலியா அணி, இந்திய அணிக்கு அவர்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்