Aran Sei

“மோடியின் தற்பெருமையும் ஆணவமுமே இந்தியாவின் மோசமான நிலைக்கு காரணம்”: விமர்சித்த ஆஸ்த்திரேலிய பத்திரிகை; மறுத்த இந்திய தூதரகம்

credits : the indian express

பிரதமர் நரேந்திர மோடியின் தவறான நடவடிக்கைகளால், கொரோனா தொற்றின்  இரண்டாவது அலை இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறிய தி ஆஸ்திரேலியன் நாளிதழுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான தி ஆஸ்திரேலியனில், ”மோடி இந்தியாவை வைரசால் ஆன பேரழிவுக்கு கொண்டு செல்கிறார்” எனும் தலைப்பில் கட்டுரை வெளியானது.

பிலிப் ஷெர்வெல் எனும் நபர் எழுதிய இந்தக் கட்டுரை, மோடியின் தற்பெருமை, தேசியவாத அரசியல், தடுப்பூசிகளை வேகமாக மக்களுக்கு அளிக்காதது, அடிப்படை வசதிகள் இல்லாத சுகாதார கட்டமைப்பு போன்றவற்றை விமர்சித்திருந்தது.

மோடியின் தவறுகள் – கட்டுப்பாடு இல்லாத ஒரு பெருந்தொற்று : தி கார்டியன் தலையங்கம்

”ஆணவம், அதீத தேசியவாத சிந்தனை, அதிகாரிகளின் இயலாமை போன்றவையே இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறும் வேளையில், பிரதமர் ஒளிந்துக் கொண்டு பொது மக்களை தவிக்க விட்டுவிட்டார்” என்று ஷெர்வெல் கட்டுரையில் கூறியிருந்தார்.

”ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த சூழலிலும், பாஜக அரசு கும்பமேளா போன்ற மத நிகழ்வுகளுக்கு அனுமதியளித்தது, பிரதமர் தலைமையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் (முகக்கவசம் அணியவில்லை) கூடிய தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றன. நரேந்திர மோடி தன்னுடைய ஆதரவாளர்களைக் கண்டு உற்சாகம் அடைந்தார். நான் இது போன்ற கூட்டத்தை எங்கும் கண்டதில்லை என்று கடந்த சனிக்கிழமையன்று இந்தியப் பிரதமர் மேற்கு வங்கத்தில் நடந்த பேரணியில் தெரிவித்தார்” என்று தி ஆஸ்திரேலியனில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

கும்பமேளா – ஹரித்துவாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 நாட்களில் 1800% அதிகரிப்பு

இஇந்தக் கட்டுரைக்குக்கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய தூதரகம், ”இந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றது, தவறான எண்ணத்துடன், அவதூறு செய்யும் நோக்கோடு எழுதப்பட்டிருப்பவை” என்று தி ஆஸ்திரேலியன் நாளிதழின் ஆசிரியர் கிறிஸ்டோபர் டோவுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் இந்தக் கடிதத்திற்கு பதில் கடிதமும் இந்திய தூதரகம் கோரியுள்ளது.

“இந்த இக்கட்டானச் சூழலில், கொரோனா நோய்த்தொற்று எனும் கொள்ளை நோயயை, உலகமே வியந்து பார்க்கும் வகையில் கையாண்ட இந்திய அரசை சிறுமைப்படுத்த வேண்டும் எனும் ஒற்றை நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளது.

கொரோனா பரவலை எதிர்த்து போராடுவதற்கான நடவடிக்கைகள் – அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

”ஒரு போர்க்கால அடிப்படையில் இந்திய அரசு செயல்பட்டு வரும் சூழலில், கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரதமர் மேற்கொண்ட பிரச்சாரங்களையும், ஒரேயோரு மத நிகழ்வையும் வைத்து இந்தக் கட்டுரை கொரோனா தொற்று பரவலுக்கு அரசின் மீது பழி போடுகிறது” என்று தெரிவித்துள்ளது.

மகராஷ்டிராவில் ஒரே ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்ட இறந்த 22 உடல்கள்: ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் நேர்ந்த அவலம்

மேலும், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு போட்டது முதல் தற்போது இந்திய மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிவரை இந்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தூதரகம் பட்டியலிட்டுள்ளது” என்றும் “இந்திய குடிமக்களின் நலனுக்கே இந்திய அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது. உலகம் முழுவதுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்குத் தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது” என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் ட்விட்டரில், இந்தியர்கள் பலர் இந்திய தூதரகத்தின் கருத்தை மறுத்து, தி ஆதிரெலியனில் வெளியான கருத்துக்களே உண்மையே என்று தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்