மக்கள் வெளியேறுவதற்கு முன்னரே கீவ் நகரிரிலிருந்து தூதரக அதிகாரிகள் வெளியேறி உள்ளனரா என்று உக்ரைன் போரில் காயம் அடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து எண்டிடிவிக்கு அளித்த பேட்டியில், “நான் உக்ரைனின் தலைநகர் கீவிலிருந்து வெளியேற முற்பட்டேன். நானும் எனது நண்பர்களும் ஒரு வாடகை கார் மூலம் லிவ் நகருக்கு பயணப்பட்டோம். அப்போது வழியில் சண்டையில் சிக்கிக் கொண்டோம். என் தோள்பட்டையில் புல்லட் பாய்ந்தது. மீண்டும் மீண்டும் நான் இலக்கானேன். அப்படியே சரிந்து விழுந்தேன். பின்னர் மருத்துவமனையில் கண் விழித்தேன். என் நெஞ்சிலிருந்தும் ஒரு புல்லட் எடுத்ததாகச் சொன்னார்கள். என் கால் எலும்பு முறிந்துள்ளது. இப்போது கீவ் நகர மருத்துவமனையில் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
உ.பி தேர்தல்: பாஜகவை தோற்கடித்தால்தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் – அகிலேஷ் யாதவ்
மேலும் அவர் கூறும்போது, நான் கீவிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் முன்னர் பலமுறை இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டேன். எப்படியாவது நான் லிவ் நகருக்குச் செல்ல ஏதாவது போக்குவரத்து ஏற்பாடு செய்யுமாறு கெஞ்சினேன். ஆனால், என்னை யாருமே திரும்பத் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது இந்த உலகம் முழுவதற்கும் அங்கே நடக்கும் உண்மை நிலவரம் தெரிய வரும். இப்போதும் என்னால் நடக்க முடியவில்லை என்று கூறி உதவி கேட்டேன். எல்லாம் போலி வாக்குறுதிகள்தான் வருகின்றன. என்னைப் போன்று நிறைய ஹர்ஜோத்கள் கீவ் நகரில் சிக்கியுள்ளனர். பலர் அவர்கள் இருக்கும் குடியிருப்புகளிலேயே அடைபட்டுக் கிடக்கின்றனர். வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூட முடங்கியுள்ளனர்.
சாதியக் குற்றங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் கைது – விடுதலை செய்ய எடிட்டர்ஸ் கில்ட் கோரிக்கை
தூதரக அதிகாரிகளிடம் பேச நிறைய முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு முறை தொடர்பு கிடைத்தபோது, நீங்கள் எங்களுக்கு முன்னதாகவே தூதரகத்தை காலி செய்துவிட்டு லிவ் நகருக்குச் சென்றுவிட்டீர்கள். தூதரகம் இயங்கி மாணவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா என்று கேள்வி கேட்டேவிட்டேன்” என்று உக்ரைன் போரில் காயம் அடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் தெரிவித்துள்ளார்.
Source: theprint
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.