Aran Sei

“இந்திய கிரிக்கெட் அணியில் உயர்சாதியினர்தான் இருக்கிறார்கள், ஆகவே அங்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்” – பிரபல கன்னட நடிகர் கருத்து

ந்திய கிரிக்கெட் அணியில் உயர்சாதியினர்தான் இருக்கிறார்கள், அங்கு இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்று பிரபல கன்னட நடிகர் சேத்தன் குமார் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானை சேர்ந்தவர் என விக்கிப்பீடியாவில் அவதூறு : விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு உத்தரவு

இதன் எதிரொலியாக, இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவைக் கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியது. ஆனால் அடுத்து நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சாம்சனுக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது. அந்த தொடரில் இரண்டாம் நிலை அணியே களமிறங்கிய நிலையில் அதில் கூட முக்கிய வீரரான சாம்சனுக்கு இடம் கொடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது.

இதன் காரணமாக இந்திய அணியில் வீரர்கள் தேர்வு செய்வதில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாகத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் #Casteist_BCCI இணையத்தில் வைரலாகியது. அதில் கருத்து பதிவிட்ட ரசிகர்கள் நீண்ட காலமாக இந்திய அணியில் சாதி பாகுபாடு நிலவுவதாகவும், இதனால் திறமை இருக்கும் வீரர்கள் கூட அணியில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அனுப்பப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தனர்.

கறுப்பினத்திற்காக கவலைபட்ட கிரிக்கெட் வீர்ர்கள் இந்திய இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டும்போது மௌனம் காப்பது ஏன்? – ஐ .ப்ரியான்ஷ்

இந்த நிலையில், கர்நாடக நடிகர் சேத்தன் குமார், இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் “இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களில் 70 விழுக்காடு பேர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். சிறப்பாக ஆடும் பிற சமூக வீரர்களுக்கு அணியில் இடம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்த அணியாக இருக்கும்.

கல்வி, வேலை மற்றும் அரசியலில் தற்போது இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை கிரிக்கெட்டிலும் அமல்படுத்த வேண்டும். உதாரணமாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் குறைந்தது ஆறு கறுப்பின வீரர்களாவது இருக்க வேண்டும் என்பது விதி. அவர்களில் இருவர் கறுப்பின ஆப்பிரிக்கர்களாக இருக்க வேண்டும். அணி தேர்வுக்கும் இதே போன்ற விதியை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தை பல்வேறு தரப்பினர் வரவேற்று வருகின்றனர்.

Source : india today

அம்பலமான கேசவ விநாயகம் | ஆட்டுக்குட்டிக்கு ஆப்படித்த சூர்யா | Aransei Roast | BJP | Annamalai

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்