Aran Sei

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா

ந்தமான் கடலில் எட்டு உடல்கள் மற்றும் 81 ரோகிங்கியா இஸ்லாமிய அகதிகளுடன் பழதாகி நிற்கும் கப்பலை இந்திய கடலோர படை கண்டுபிடித்திருப்பதாகவும், அந்தக் கப்பல் மீண்டும் வங்கதேசத்திற்கு திரும்பும் விதமாக கப்பலில் உள்ள பழுதை நீக்கி வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு  வங்காளதேசத்தின் காக்ஸ் பஜாரில் இருந்து 56 பெண்கள், 21 ஆண்கள், 8 சிறுமிகள், 5 சிறுவர்களுடன் மலேசியா செல்வதற்காக பிப்ரவரி 11, 2021 ஆம் தேதி புறப்பட்ட கப்பல், நடுக்கடலில் சர்வதேச எல்லையில் பழுதாகி நிற்பதாகவும், அதை மீண்டும் பத்திரமாக திருப்பி அனுப்ப வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பாஜகவை ஆதரித்து தவறிழைத்து விட்டேன் – விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் நரேஷ் திகாய்த்

இந்திய அதிகாரிகளின் தகவலின்படி, மியான்மரில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் முகாமிட்டிருக்கும் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் இருந்து, அகதிகளுடன் கிளம்பி கப்பல், நான்கு நாட்களில் எஞ்சின் பழுதாகி விட்டதால், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அகதிகள் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக  பேசிய, பெயர் தெரிவிக்க விரும்பாத இந்திய கடல்படை அதிகாரி, ”இந்த வாரத்தின் தொடக்கத்தில் படகு  பழுதாகி இருப்பதாக, எங்களுக்கு ரோகிங்கியா மக்களிடம் இருந்து அவசர தகவல் கிடைத்தது. உயிர்களைக் காப்பாற்ற எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம்” எனக் கூறினார்.

சவுதி பத்திரிக்கையாளரை கொலை செய்ய சவுதி  இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார் – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

”நடுக்கடலில் தத்தளிப்பவர்களை வங்கதேசத்திற்கு திரும்ப அனுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது மற்றும் அவர்கள் பத்திரமாக திரும்பும் விதமாக அவர்கள் கப்பலை பழுதுநீக்குவது அல்லது புதிய கப்பலை வழங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும். உயிர்பிழைத்திருப்பவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் புதிய ஆடைகள் வழங்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு மேற்கொள்ளவது தொடர்பாக எதுவும் தெரியவில்லை” என அந்த அதிகாரி தெரிவித்தார்.

கப்பலில் இருப்பவர்களுக்கு உதவும் விதமாக, 2 இந்திய கடல்படை கப்பல் அனுப்பப்பட்டிருப்பதாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

சத்திஸ்கர் விவசாயிகள் மாநிலமா அல்லது விவசாயிகளைக் கொலை செய்யும் மாநிலமா ? – பாஜக கேள்வி

கப்பல் இந்திய எல்லையில் இருந்து 147 கிலோமீட்டர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து 1,700 கிலோமீட்டர் தொலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்றும், “கப்பல் யாருடைய பிராந்திய கடல் பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த நாடு முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ளது. மேலும் சர்வதேச சட்டம் மற்றும் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் கொள்கையின் கீழ் தங்கள் கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்” என வங்கதேச வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா அகதிகளைக் கண்காணிக்கும் குழுவான, அரக்கன் திட்டத்தின் இயக்குனர் கிறிஸ் லெவா, இந்தியா பொறுப்பைக் கைவிட முயற்சிக்கிறது என்றும், அகதிகளை “கடலில் வைத்திருப்பதன் மூலம் அவர்களின் உயிரை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றும்  கூறினார்.

Source: Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்