Aran Sei

‘பண்டோரா பேப்பர்ஸ்’ – அவிழும் உண்மைகள்

ரி விதிப்பு குறைவாக உள்ள நாடுகளில், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பபட பல்வேறு வழிகளில் முதலீடுகள் செய்தவற்கான சேவையை வழங்கும் 14 சர்வதேச நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 13.4 லட்சம் ஆவணங்களை ஐசிஐஜே (International consortium of Investigative Journalists) என்ற சர்வதே புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்பிற்கு கிடைத்துள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்று பெயரிடப்பட்டுள்ள, சுமார் 3 டெரா பைட் அளவுள்ள அந்த ஆவணங்களை, 117 நாடுகளில் உள்ள 150 ஊடக நிறுவனங்களுக்கு ஐசிஐஜே வழங்கியுள்ளது. 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சுமார் ஓராண்டு அந்த ஆவணத்தை ஆராய்ந்ததில், 200 நாடுகளைச் சேர்ந்த 330 அரசியல்வாதிகள், 130 பெரும் செல்வந்தர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் குற்றப்பின்னணி உடையர்கள் என பலரும், வெளிநாடுகளில் தங்கள் பணத்தை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் 380 இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ள நிலையில், ஐசிஐஜேவுடன் இணைந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து இந்தியாவில் புலன் விசாரணையை நடத்தியுள்ளது. இதில் 60 இந்தியர்களின் (நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்) வெளிநாட்டு முதலீடுகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளது.

உலகை குலுக்கியுள்ள ‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – வருமானத்தை வெளிநாடுகளில் பதுக்கிய பிரபலங்கள்

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பனாமா, ஹாங்காங், செஷேல்ஸ் உட்பட வரி குறைந்த மற்றும் முதலீடு குறித்த ரகசியம் காக்கப்படும் நாடுகளில் ரியல்எஸ்டேட், விமானம், சொகுசு கப்பல், கலைப் பொருட்கள், பங்குகள் என பல்வேறு வழிகளில் தனி நபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளது பண்டோரோ பேப்பர்ஸ் ஆவணங்கள் மூலம் தெரியிவந்துள்ளது.

இந்தியாவில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழில் அதிபர்கள் அணில் அம்பானி, நிரவ் மோடி உள்ளிட்ட 380 பேர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது பண்டோரா பேப்பர்ஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தப் புலனாய்வு தொடரில் வரும் நாட்களில் மேலும் சிலர் இடம்பெறவுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகளுக்கு ரூ.88,000 கோடிக்கு மேல் கடன்பட்டிருக்கும் மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் பெயர்களும் இதில் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழிலதிபர்கள் சிறையில் உள்ளார்கள். 2007 ஆம் ஆண்டு முதல், இவர்கள் பிரிட்டன் வெர்ஜின் தீவுகள் மற்றும் பஹாமாஸில் வெளிநாட்டு நிறுவனங்களை நடத்தியிருக்கிறார்கள்.

மேலும், கட்டுமானத் துறையைச் சேர்ந்தவரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவருமான டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது மனைவியுடன் சேர்ந்து  பிரிட்டன் வெர்ஜின் தீவுகளளில் இரண்டு நிறுவனங்களையும் ஒரு அறக்கட்டளையையும் நடத்தியுள்ளார்.

‘வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி இருக்கும் இந்தியர்கள்’ – சச்சின், அணில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களை வெளியிட்ட பண்டோரா பேப்பர்ஸ்

2009 ஆம் ஆண்டில், அவரது நிறுவனமானது இந்தியாவில் ரியால்டி திட்டங்களில் முதலீடு செய்ததற்காக கிரெடிட் சூயிஸ் என்ற நிதி நிறுவனத்திடமிருந்து 210 மில்லியன் டாலர் கடன் வாங்கியது. ஆனால், அதை திருப்பி செலுத்த தவறியது. மேலும், வீடு வாங்குபவர்களை ஏமாற்றியதற்காக இவர் தற்போது சிறையில் உள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஒரு நகைக்கடை விற்பனையாளரும் இப்பட்டியலில் உள்ளார். அவருடைய நிறுவனம் 19 இந்திய வங்கிகளுக்கு ரூ. 500 கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றும் சவுதி தொழிலதிபரும் மெக்சிகன் போதைப்பொருள் கடத்தலில் பெயர் பெற்ற ஒருவருடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும் இப்பட்டியலில் உள்ளார். இந்தியாவில் இருந்து செயல்படுபவர்கள் தவிர, பல முக்கிய வெளிநாடு வாழ் இந்தியர்களும் உள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது. இவர்கள் இந்திய வங்கிகளிடமிருந்து அதிக கடன் வாங்கியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்