சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலுக்காக இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஓமருக்கு இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இல்ஹான் ஒமர் அறிமுகப்படுத்திய தீர்மானத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷீதா தாலிப் மற்றும் ஜுவான் மர்காஸ் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்கவும், சர்வதேச மதச் சட்டத்தின் கீழ் செயல்படும் நாடாக இந்திய இருப்பதை உறுதி செய்யுமாறு அமெரிக்க வெளியிவுத் துறையை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
இந்திய அமெரிக்க முஸ்லிம் Aகவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஒமர் மற்றும் அவரது நாடாளுமன்ற சகாக்கள் இரண்டு பேருக்கும் எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
”நாம் நேசிக்கும் மற்றும் வணங்கும் நாட்டில் விளிம்பு நிலை மக்கள் பாகுபாடு காட்டப்பட்டு குற்றவாளிகளாக்கப்படுவது உண்மையில் வருத்தமளிக்கிறது. மதவெறி, சகிப்புத்தன்மையின்மை மற்றும் சர்வாதிகாரத்தின் பாதையில் நாடு சென்று கொண்டிருக்கிறது” என்று கவுன்சிலின் தலைவர் சையத் அப்சல் அலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறுஸ்துவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற மத சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை தீர்மானம் கண்டிக்கிறது.
மேலும், இந்தியாவில் மத சிறுபான்மையினர் நிலைமை ’மோசமடைந்து வருவது’ குறித்து கவலையைத் தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துமாறும் சபைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம், தேவையான நடவடிக்கைகளுக்காக சபையின் வெளிவிவகாரக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Source: PTI
தர்மயுத்தம் OPS Vs ஆளுமை ஐயா EPS | அடிமைகளுக்கிடையே அதிகாரப்போட்டி | ADMK Latest News | BJP | Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.