Aran Sei

விவசாய சட்டங்களுக்கு எதிராக அறிஞர்கள் கூட்டறிக்கை – மத்திய அரசுக்கு கடும் கண்டனம்

Image Credits: The Wire

த்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் வரலாற்று சிறப்புமிக்கது என்று அரசே கூறிக்கொள்கிறது, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு, இச்சட்டங்களை இயற்றுவதற்கு முன், அதுகுறித்து விவசாயிகளுடன் உரிய விவாதங்களை நடத்த தவறிவிட்டது என்று நாடு முழுவதிலுமிருந்து 200 கல்வியாளர்கள் அடங்கிய குழு தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட அறிக்கையில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி), இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கரக்பூர்; இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்; உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம், பெங்களூர்; ஹைதராபாத் பல்கலைக்கழகம்; உட்பட நாட்டின் சில மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

’நேர்மையான நோக்கத்துடன் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புகிறோம்’ – மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

“விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளை சரி செய்வதற்கு பதிலாக, மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளத. தவறான தகவல்களை பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் விளைவாக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்தச் சீர்திருத்தங்கள் ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகளை உருவாக்குவதன் மூலம், சிறிய விவசாயிகளை சுரண்டலுக்கு ஆளாக்கும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாமிநாதன் குழு அறிக்கையை செயல்படுத்தியதா மோடி அரசு? – உண்மை நிலவரம்

அரசு பல முனைகளில் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறி இந்த அறிக்கை, அவற்றை பட்டியலிட்டுள்ளது.

  1. உரிய நடைமுறையைப் பின்பற்றுவதில் தோல்வி: இந்தச் சீர்திருத்தங்கள், வரலாற்று சிறப்புமிக்கது என்று கூறப்பட்டது. பாராளுமன்றக் குழுக்களில் அதிக விவாதம் அல்லது கலந்துரையாடல் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. வெற்றிகரமான சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன் குறைந்தது ஒரு வருடம் விவாதிக்கப்படும்.
  2. உண்மையான பங்குதாரர்களை அணுகுவதில் தோல்வி: உண்மையான பங்குதாரர்களான விவசாயிகள் அல்லது உழவர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்காமல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
  3. உண்மையான கவலைகளை ஒப்புக்கொள்வதில் தோல்வி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விவசாய அமைப்புகள் உண்மையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. இந்தக் கவலைகளை ஒப்புக்கொள்ள அரசு முற்றிலும் மறுத்துவிட்டது.
  4. கருத்து வேறுபாட்டை ஏற்றுக்கொள்வதில் தோல்வி: தங்கள் கருத்து வேறுபாட்டைத் தெரிவிக்க நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் அமைதியான போராட்டத்தை ஏற்பாடு செய்தனர். ஆனால், அதனை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

“இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் எங்களது ஆதரவு எப்போதும் இருக்கும்” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்