Aran Sei

‘ஒரு பெருமைமிக்க இந்தியனாக என் தந்தையின் கருத்துகளுக்கு வருந்துகிறேன்’ – யுவராஜ் சிங்

பேச்சுவார்த்தை மூலமாக விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என்றும் ஒரு பெருமைமிக்க இந்தியராக, யோகிராஜ் சிங் (அவரது தந்தை) கூறிய கருத்துகளுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர் 12), தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடும் யுவராஜ் சிங் ட்விட்டரில், “பிறந்த நாள் என்பது ஒரு ஆசையை அல்லது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும். இன்று இந்தப் பிறந்தநாளைக் கொண்டாடுவதை விட, நம் விவசாயிகளுக்கும் நம் அரசிற்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் விரைவாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். அதுதான் என் விருப்பமும் கூட.” என்று கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

“சந்தேகத்திற்கு இடமின்றி, விவசாயிகள்தான் நம் நாட்டின் உயிர்நாடி. அமைதியான பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகளே இல்லை என்று நான் மனதார நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னர், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த சில விளையாட்டு வீரர்களும், கேல் ரத்னா விருது பெற்ற குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங்கும், அவர்கள் வென்ற தேசிய விருதுகளைத் திருப்பித் தருவதாக அறிவித்திருந்தனர்.

விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்

இந்நிலையில், “விவசாயிகள் சரியானதைக் கேட்கிறார்கள். அரசு அவர்களுக்குச் செவிசாய்க்க வேண்டும். விவசாயிகளின் போராட்டங்களுக்காக, தங்களின் மதிப்புமிக்க விருதுகளைத் திருப்பித் தரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் ஆதரிக்கிறேன்.” என்று யுவராஜ் சிங்கின் தந்தையான யோகிராஜ் சிங் கூறியிருந்தார்.

விவசாயிகள் போராட்டம் : அரசு விருதை திருப்பித்தரும் ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங்

விருதைத் திருப்பி அளிப்பது குறித்து குறிப்பிடுகையில், “ஒரு பெருமைமிக்க இந்தியராக, யோகிராஜ் சிங் (தனது தந்தை) கூறிய கருத்துகளால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே. அதில் என் கருத்து எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  யுவராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்