Aran Sei

” லவ் ஜிகாதை தடுக்காமல் தூங்கும் கேரள அரசு ” : யோகி ஆதித்யநாத்

வ் ஜிகாத்தை தடுக்காமல் கேரள அரசு தூங்கி கொண்டிருக்கிறது, என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய இளைஞர்கள், இந்துப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

உத்தர பிரதேச அரசு, சென்ற ஆண்டு, நவம்பர் மாதம் 27-ம் தேதி, திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறார்கள் உட்பட பல இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி மனித உரிமை அமைப்புகள், முன்னாள் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் 100 பேர் யோகி ஆதித்யநாத் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மதமாற்ற தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் கேரள சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், கேரள பாஜகவின் மாநில தலைவர் கே.சுரேந்திரன் ”விஜய் யாத்திரையை” மேற்கொள்ள இருக்கிறார். பாஜக தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக பார்க்கப்படும் இந்த யாத்திரை, 15 நாட்கள் நடைபெற இருப்பதாக என்டிடிவியின் செய்தி கூறுகிறது. இந்த யாத்திரை அனைத்து முக்கியமான தொகுதிகளையும் கடந்து செல்கிறது.

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

இந்த யாத்திரையை, தொடங்கி வைத்து பேசிய, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ”2009-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் லவ் ஜிகாத்தை நிறுத்தாவிடில் கேரளா இஸ்லாமிய  மாநிலமாக மாறிவிடும் என கூறியதை கண்டுகொள்ளாமல் கேரள அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது” என கடுமையாக சாடியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்