Aran Sei

பெண்கள் கால்நடையோ, உயிரற்ற பொருளோ இல்லை – ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம்

பெண்களுக்குத் தங்களது துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை, அவரது குடும்பத்தினரே கடத்தியதாக, சஞ்சீவ் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் கிராமத்தில், பட்டியலின வகுப்பை சேர்ந்த சஞ்சீவ் குமார் மற்றும் ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்த கோமல் பர்மர் திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்யப் பிப்ரவரி 1 ஆம் தேதி விண்ணப்பித்ததாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு – வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை

விண்ணப்பித்த இருவரும் தங்கள் கிராமத்திற்கு திரும்பாமல், பாலம்பூரில் தங்கியருந்தாகவும், இதை அறிந்த கோமலின் குடும்பத்தினர், சஞ்சீவ் குமாரின் குடும்பத்தினர் மிரட்டி இருவரும் ஊருக்குத் திரும்ப வற்புறுத்தியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைவ் லா இணையத்தளத்தின் தகவலின்படி, ஊருக்கு இருவரும் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் கோமல் பர்மரை அவரது குடும்பத்தினர் பிப்ரவரி 2 ஆம் கடத்தி சென்றதால் சஞ்சீவ் குமார் நீதிமன்றத்தை நாடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கோமர் பர்மரின் தந்தை, தனது மகளுக்கு ’மனநலப் பிரச்சைகள்’ இருப்பதாக கூறியிருந்த நிலையில்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட பர்மர் அதை மறுத்ததோடு, ”மனுவில் சொல்லப்பட்டிருப்பதையும், நடந்த சம்பவங்களையும் உறுதிபடுத்தினார்” என்பது நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகியிருப்பதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவிக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

தனது தந்தைக்கு இருக்கும் பிரதான பிரச்னை சாதி வேறுபாடு தான் என கோமல் குற்றம்சாட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் சிங் தாக்கூர் வழங்கிய உத்தரவில், அரசியலமைப்பு சட்டத்தின்படி “சாதிய ரீதியிலான பாகுபாட்டை காட்டி, ஒருவருக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தேடுக்கும் உரிமையை மறுப்பது என்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் என தெரிவித்தாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறன் தரவுகள் – இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அறிவிப்பு

மேலும், அந்தத் தீர்ப்பில், “ஒரு பெண் ஒரு கால்நடையோ அல்லது உயிரற்ற பொருளோ இல்லை. மற்றவர்களைப் போலவே உரிமைகளைக் கொண்ட ஒரு  சுதந்திரமான உயிர் என்றும், குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு அவருக்கு விருப்பட்ட வாழ்க்கையை அவரை வாழ விட வேண்டும்” என்றும் நீதிபதி தாக்கூர் கூறியதாக தி வயர் தெரிவித்துள்ளது.

இறுதியாக, நீதிபதி தாக்கூர் தனது தீர்ப்பில், பர்மருக்கு அவர் ஆசைப்பட்ட வாழ்க்கையை, அவர் ஆசைப்படும் இடத்தில் வாழும் உரிமை இருக்கிறது என்றும் ,அவரது உயிர், உடமைகளுக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்