Aran Sei

“போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள்” – விவசாயிகள் எதிர்பார்ப்பு

தில்லி எல்லையான சிங்குவில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட பெண்கள் வரும் நாட்களில் போராட்டத்தில் சேர வாய்ப்புள்ளதாக தி இந்து  தெரிவித்துள்ளது.

பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பெண்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் – வரலாறு படைக்கும் பெண்கள்

விவசாயிகள் சங்கத் தலைவர் ஹரேந்திர் சிங் லகோவால் எக்னாமிக்ஸ் டைம்ஸ்’சிடம் கூறுகையில், தில்லியைச் சேர்ந்த ஓர் அமைப்பு, சுமார் 2,00 கூடாரங்களை நன்கொடையாக அளித்துள்ளது. அவை இப்போது சிங்கு எல்லையிலும் திக்ரி எல்லையிலும் பெண்களுக்காக வைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

சிங்கு எல்லையில் நேற்று (டிசம்பர் 14) நடந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 33 விவசாயிகளில் ஒருவரான சிவ்குமார் கக்கா, இது பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் போராட்டம் என்று தெரிவித்துள்ளார்.

நவீன அடிமைப் பெண்கள்: அதிர்ச்சியூட்டும் ஐநா அறிக்கை

மேலும், பல பெண்கள் ஏற்கனவே போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆனால் இன்னும் அதிகமான பெண்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

“பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 2,000 க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் இணைவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கூடுதலாக இங்கு பல சாப்பாட்டுப் பந்திகள் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பெண்களுக்காகத் தனியாகவும் ஒன்றைத் தொடங்க நாங்கள் யோசித்து வருகிறோம். அவர்களின் குடிநீருக்கும் குளியல் தேவைகளுக்கும் கூடுதல் தண்ணீர் டேங்கர்களுக்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.” என்று சிவ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியப் பெண்கள் ‘தரைமட்டம்’ – அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன்

மேலும், “எங்கள் முக்கிய நோக்கம் பெண்கள் தங்குவதற்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை வழங்குவது. ஏனென்றால், அவர்கள் விவசாயிகளின் மகள்கள். ” என்று மேற்கோள்காட்டியுள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ள பெண்களுக்குக் காலியாக உள்ள அல்லது முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத கட்டடங்களைத் தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றும் ஏற்பாடு உள்ளது என்றும் சிலர் தங்கள் வீடுகளையும் தற்காலிகக் கழிப்பறைகளையும் நன்கொடைகளாக வழங்குவதற்குத் தயாராக உள்ளனர் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் ஹரேந்திர் சிங் லாகோவால் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்