குடியரசு தினத்தன்று அரசு நடத்தும் ராணுவ அணிவகுப்பிற்கு இணையாக டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்படும் என்று போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ள நிலையில், அதில் தாங்களும் பங்கேற்போம் என்று விவசாய பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக, ஹரியானா மாநிலம் முழுவதும் பல இடங்களில், டிராக்டர்களை ஓட்ட பெண்கள் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு – ராணுவ அணிவகுப்பிற்கு இணையாக விவசாயிகள் நடத்த முடிவு
இரண்டு மாதங்களுக்கு மேலாக, டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களில் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். இப்போது, ஜனவரி 26 ஆம் தேதி பெண்கள் டிராக்டர்களில் டெல்லிக்குப் படையெடுப்பதன் வழியாக, ஆணாதிக்க ஹரியானாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் படியாக மட்டும் இல்லாமல், போராடும் விவசாயிகளின் கண் பார்வைகளை ஈர்க்கும் விதத்தில் மட்டும் இல்லாமல், அவர்களது குடும்பங்களும் இந்தப் போராட்டத்திற்கு உறுதுணையாக பின்னால் நிற்கின்றன என்ற செய்தியையும் அனுப்பும் வகையில் இருக்கும்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஒரு டிராக்டரை எவ்வாறு கிளப்புவது என்று தொடங்கி, அதை அணைப்பது வரை பெண்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சஃபா கெரி கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான சிக்கிம் நெய்ன், “இது அரசுக்கு காட்டும் எங்கள் டிரெய்லர் மட்டுமே. டெல்லி டிராக்டர் பேரணியில் பங்கேற்க எங்கள் டிராக்டர்களுடன் செங்கோட்டைக்கு செல்வோம். இது ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும்.” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.
விவசாய சட்டங்கள் – ’வாய்ச் சொல்லால் பயனில்லை; குறைந்தபட்ச விலையை சட்டமாக்குங்கள்’ : காங்கிரஸ்
மேலும், “நான் ஒரு விவசாயியின் மகள். அரசு ஏற்கனவே விவசாயிகளுக்கு ஏராளமான அக்கிரமங்களைச் செய்துவிட்டது. ஆனால் இதை நாங்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம். பெண்களின் சக்தி இப்போது போர்களத்திற்கு வந்துள்ளது. நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்களை லேசாக நினைக்க வேண்டாம். இது இரண்டாவது சுதந்திரப் போர். இன்று நாங்கள் போராடவில்லை என்றால், எதிர்கால சந்ததியினருக்கு தர எங்களிடம் என்ன இருக்கும்? ” விவசாயி சிக்கிம் நெய்ன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.