Aran Sei

தேவைப்பட்டால் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம் – ராகேஷ் திகாயத்

Image credit : indianexpress.com

விவசாய சட்டங்களை திரும்பப் பெற வைப்பதற்காக, தேவைப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டரில் நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம் என பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூரில் திங்கள்கிழமை (மார்ச் 8) நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட,  திகாயத் இவ்வாறு பேசியுள்ளார்.

“விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்காக, தேவைப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டரில் நாடாளுமன்றம் செல்வோம். குடியரசு தினத்தனறு 3,500 டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைந்தன, அவை வாடகை டிராக்டர்கள் இல்லை” என அவர் கூறியுள்ளார்.

பெண் விவசாயிகளின் இன்குலாப் மருதாணி – ‘மகளிர் தின வாழ்த்து சொன்ன பிரதமருக்கு போராடும் எங்கள் குரல் கேட்கவில்லையா?’

மத்திய வேளாண் அமைச்சரும், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவருமான நரேந்திர சிங் தோமரை, பெயர் குறிப்பிடாமல், அவர் அதிகாரம் இல்லாதவர் என திகாயத் கூறியுள்ளார்.

“நீங்கள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தேடுத்த தலைவருக்கு ஒரு அதிகாரமும் இல்லை. அவரால் சுயமாக எங்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. அவர் கோப்புகளுடனும், பதில்களுடனும் வருகிறார்” என அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, மத்திய பிரதேசத்தின் ரேவா மற்றும் ஜபல்பீரில் மார்ச் 14, 15 தேதிகளில் நடைபெறும் பேரணியில் ராகேஷ் திகாயத் கலந்து கொள்வார் என பாரதிய கிசான் சங்கத்தின் அனில் யாதவ் தெரிவித்திருந்தார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்