Aran Sei

‘ஹவுடி மோடியின் விளைவு – இந்தியா அசுத்தமானது’

Image Credits: DNA India

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “இந்தியா அசுத்தமானது, அதன் காற்று அசுத்தமானது” என்று கூறியதைத் தொடர்ந்து #HowdyModi (ஹாவ்டிமோடி) எனும் ஹேஸ்டக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாத நிகழ்வில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தனது போட்டியாளர் ஜோ பிடனுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது, சுற்றுச்சூழல் மற்றும் பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம் குறித்து பேசிய டிரம்ப், “கடந்த 35 வருடங்களில் அமெரிக்கா வெளியிடும் கார்பன் அளவு சரியானதாக உள்ளது. சீனாவைப் பாருங்கள் அவ்வளவு அசுத்தமாக உள்ளது. ரஷ்யாவை பாருங்கள் எவ்வளவு அசுத்தமாக உள்ளது. இந்தியாவை பாருங்கள், அசுத்தமாக உள்ளது; அதன் காற்று அசுத்தமாக உள்ளது,” என்று கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த கருத்து இந்திய ட்வீட்டர் வாசிகளை கோவப்படுத்தியது. ‘ஹவுடி மோடி’ நிகழ்வின் விளைவாக இந்தியாவின் காற்று ‘அசுத்தமானது’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாகக் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் மத்திய அரசைக் கேலி செய்துள்ளார்.

“டிரம்ப்: நட்பின் பலன், 1) இந்தியாவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை குறித்த கேள்விகள் 2) இந்தியா காற்றில் அழுக்கை அனுப்புகிறது என்கிறார் . இந்திய “காற்று அசுத்தமானது” 3) இந்தியாவை “வரி விதிப்பதில் மன்னர்” என்று அழைத்துள்ளார். ‘ஹவுடி மோடியின்’ முடிவு!” என்று கபில் சிபல் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிரம்பின் கருத்து மற்றும் இந்திய அரசாங்கத்தின் அமைதியை கண்டித்து பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். #HowdyModi ஐத் தவிர, #NamasteTrump, #Doland போன்ற ஹேஷ்டேக்குகளின் கீழ் பல பதிவுகள் டிவிட்டரில் காணப்பட்டன.

அமெரிக்காவில் செப்டம்பர் 2019 இல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணைந்து உரையாற்றிய நிகழ்வில் ‘ஹாவ்டிமோடி’ எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதேசமயம், 2020 பிப்ரவரியில் இந்தியாவில் டிரம்பை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பெயர் ‘நமஸ்தே டிரம்ப்’ (வணக்கம் டிரம்ப்).

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்