Aran Sei

‘கொரோனா தடுப்பூசி எப்போது வரும் மோடிஜி?’ – ராகுல்காந்தி கேள்வி

ந்தியாவிற்கு எப்போது கொரோனா தொற்று தடுப்பூசி வரும் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (டிசம்பர் 23) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார். அதில், ”ஏற்கனவே 23 லட்சம் உலக மக்கள், கொரோனா தொற்று தடுப்பூசியைப் பெற்றுவிட்டனர். சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற உலக நாடுகள் தடுப்பூசி விநியோகத்தைத் தொடங்கிவிட்டன.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – உலகின் முதல் நாடு பிரிட்டன்

மேலும், எப்போது இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசி வரும் மோடிஜி என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ட்வீட்டுடன், புள்ளி விவரங்கள் அடங்கிய ஒரு படத்தை இணைத்துள்ளார். அதில், சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் விநியோகிப்பட்ட தடுப்பூசிகள் குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா தடுப்பூசி- புலம்பெயர்ந்தோரின் வெற்றிக் கதை

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தால்தான்,  மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சங்களும் சந்தேகங்களும் நீங்கி, நம்பிக்கை பிறக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சியைச்  சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலோட், “தொற்றுநோயால் ஏற்பட்ட ஊரடங்கால் நாட்டில் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால், நாட்டில் பெரும் பகுதியினர் தடுப்பூசியை விலை கொடுத்து வாங்க முடியாத சூழலில் உள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இலவச தடுப்பூசி பெற வேண்டும். மற்ற அனைத்து தடுப்பூசிகளையும் போலவே, இதுவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.” என்று மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.

‘கொரோனா தடுப்பூசி எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்’ – ராஜஸ்தான் முதல்வர்

கடந்த நவம்பர் 24 ம் தேதி, தடுப்பூசி விநியோகம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பூசி ஒரு வார காலத்திற்குள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அது உலகின் மலிவான விலைக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்