Aran Sei

மேற்கு வங்க பாஜக வேட்பாளர்கள் பட்டியல் – எதிர்ப்பு தெரிவித்து வெளியேறும் அதிருப்தி தலைவர்கள்

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து சில மணிநேரங்களில், கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறி, மூத்த உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

சில பாஜக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ததுடன், அவர்களின் ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்க பாஜக தலைவர்களில் ஒருவரான சோவன் சாட்டர்ஜிக்கும் அவரது நண்பரான பைக்‌ஷாகி பானர்ஜிக்கும், பாஜகவில் இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால், அவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.

நந்திகிராமில் நடைபெறவுள்ள விவசாயிகள் மகா பஞ்சாயத்து – பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம்

2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற பெஹலா பூர்பாவில் சோவன் சாட்டர்ஜி போட்டியிட விரும்பியிருந்தார்.

இது தொடர்பாக, மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷுக்கு சோவன் சாட்டர்ஜி எழுதிய கடிதத்தில், அவரும் பைக்‌ஷாகி பானர்ஜியும் இனி பாஜக கட்சியில் இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

பைக்‌ஷாகி பானர்ஜி, தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்ததாகவும், இந்த சதியும் துரோகமும் நீண்ட காலம் நிலைத்திருக்காது என்றும் தனது முகநூல் பக்கத்தில் பாஜகவை விமர்சித்துள்ளார்.

அலிப்பூர் த்வார் மாவட்ட பாஜக தலைவர், ஹூக்லி மாவட்ட முன்னாள் தலைவர் உட்பட பலர், பாஜகவின் வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Source : INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்