மேற்கு வங்காள மாநிலத்தின் பாஜக தலைவர் திலிப் கோஷ் நேற்று புதிய சச்சரவில் சிக்கியுள்ளார் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயங்களைக் குறிப்பிட்டு பேசிய அவர், மமதா பானர்ஜி புடவைக்குப் பதிலாக பெர்முடாஸ் (அரைக்கால் சட்டை) அணிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மமதா பானர்ஜி, சென்ற மார்ச் 11-ம் தேதியன்று நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது, அவரது காரின் கதவு வேகமாக அடைக்கப்பட்டு அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன. கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, காலில் கட்டுடன் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்னமும் சக்கர நாற்காலியின் உதவியுடனேயே பயணிக்கும் மமதா பானர்ஜி தினமும் மூன்று தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது. பொதுக் கூட்டங்களில் அவரது காயமடைந்த கால் ஆதரவுக்காக ஒரு முக்காலி மீது வைக்கப்படுகிறது.
“கட்டு அவிழ்க்கப்பட்டு விட்டது, பேண்டேஜ் போடப்பட்டிருக்கிறது. அவர் புடவை அணிந்திருக்கிறார், ஒரு பாதம் மூடப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக, கால் தெளிவாக தெரியும் வகையில் அவர் ஒரு பெர்முடாஸ் போட்டுக் கொள்ள வேண்டும்” என்று புருலியாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் செவ்வாய்க் கிழமையன்று திலிப் கோஷ் பேசியுள்ளார்.
இதற்கு திரிணாமூல் காங்கிரசிடமிருந்து மட்டுமின்றி பிற எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
“இத்தகைய இழிவுபடுத்தும் கருத்துக்களை திலிப் பாபுவிடமிருந்து மட்டும்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு பெண் முதலமைச்சருக்கு எதிரான கண்டனத்துக்குரிய கருத்துக்கள், வங்காளத்தில் பாஜக தலைவர்கள் பெண்களை மதிப்பதில்லை என்பதைக் காட்டுகிறது.” என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் ட்வீட் செய்துள்ளது.
এইরকম কুরুচিকর মন্তব্য @DilipGhoshBJP বাবু ছাড়া আর কারোর থেকে প্রত্যাশিত নয়!
একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে @BJP4Bengal নেতারা মহিলাদের সম্মান করে না।
বাংলার মা-বোনেরা @MamataOfficial-এর প্রতি এই অপমানের যোগ্য জবাব দেবে ২রা মে। pic.twitter.com/OINU6M7a1W
— All India Trinamool Congress (@AITCofficial) March 24, 2021
“மமதா பானர்ஜி இழிவுபடுத்தப்பட்டதற்கு வங்காளத்தின் பெண்கள் மே 2-ம் தேதி தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்றும் அது கூறியுள்ளது.
திரிணாமூல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, “மமதாதீ ஏன் ஒரு புடவை அணிகிறார், அவர் தனது கால்களை நன்கு வெளிப்படுத்தும் வகையில் “பெர்முடா” அரைக்கால் சட்டை அணிய வேண்டும் என்று வங்காள பாஜக தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த வக்கிரமான, வாடிப்போன குரங்குகள் தாங்கள் வங்காளத்தில் வெற்றி பெறப் போவதாக நினைக்கிறார்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.
@BJP WB Pres asks in public meeting why Mamatadi is wearing a saree, she should be wearing “Bermuda” shorts to display her leg better
And these perverted depraved monkeys think they are going to win Bengal?
— Mahua Moitra (@MahuaMoitra) March 24, 2021
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர்களும் முதலமைச்சருக்கு எதிரான இந்தக் கருத்துக்களை “இழிவுபடுத்துபவை” என்று கண்டனம் செய்துள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.