Aran Sei

விவசாய சட்டங்களை திரும்பப் பெறவைக்காமல் ஓயமாட்டோம் – ராகுல் காந்தி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது என்றும் மோடி அரசின் தன்முனைப்பு உடைக்கப்படும். இந்தச் சட்டங்களை திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறகோரியும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரிணாமூல் காங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் 7 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்: பாஜக திரிணாமூல் காங்கிரசிடையே வலுக்கும் மோதல்

இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதற்காக நாடுமுழுவதும் 2 கோடி விவசாயிகளிடம் இந்தச் சட்டத்துக்கு எதிராகப் பெறப்பட்ட கையொப்பத்தை கடந்த மாதம் குடியுரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் ராஜ்பவன் மாளிகை நோக்கி இன்று ராகுல் காந்தி தலைைமயில் பேரணி சென்றுள்ளனர்.

வேளாண் சட்டங்களால் பாதிக்கப்படுவோரின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – ஐஎம்எஃப் எச்சரிக்கை

அப்போது டெல்லியில் உள்ள துணை நிலை ஆளுநரின் மாளிகைக்கு வெளியே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளார்.

போராட்டத்தில் பேசிய அவர், ”மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது. மாறாக அவர்களை அழித்துவிடும். அம்பானி, அதானி ஆகியோருக்கு உதவுவதற்காத்தான் இந்தச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறது” என்று பேசியுள்ளதாக எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

‘எங்கள் விதிகள் பிடிக்காவிட்டால், தாராளமாக வெளியேறலாம்’ – டிவிட்டர் நிறுவனம்

மேலும், “இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும்வரை காங்கிரஸ் கட்சி பின்வாங்காது என்றும் நிலம் அபகரிப்புச் சட்டம் முன்பு வந்தபோது, விவசாயிகளின் நிலத்தை எடுத்துக் கொள்ள முன்பு, மோடி அரசு முயன்றது. ஆனால், அதையும் அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிதான் தடுத்தது. இப்போது பாஜகவும், அவர்களின் சில நண்பர்களும் சேர்ந்து மீண்டும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்த இந்த வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் பக்கத்தில் “தங்களி்ன் உரிமைகளை வெல்வதற்காக அகங்காரம் பிடித்த மோடி அரசுக்கு எதிராக சத்யாகிரக போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்”. என்று பதிவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு எதிராக நடந்துவரும் அட்டூழியத்துக்கும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் எதிராக ஒட்டுமொத்த தேசமே குரல் கொடுத்து வருகிறது. நீங்களும் இந்த சத்யாகிரஹப் போராட்டத்தில் ஒருபகுதியாக பங்கேற்க வேண்டும்” என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்