Aran Sei

‘ஜனவரியில் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்படலாம்’ – பாஜக தேசியச் செயலாளர்

மேற்கு வங்கத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க மத்திய  பாஜக ஆர்வமாக இருக்கிறது என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு வங்க அகதிகளின் தொடர்பான பிரச்சனையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு அனுதாபம் காட்டவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், பாஜக ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டத்தில், பாஜக தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா கலந்துகொண்டுள்ளார். அப்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், “அண்டை நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வரும் துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதற்கான நேர்மையான நோக்கத்துடனே மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக

விஜயவர்கியாவின் கருத்துக்குப் பதிலளித்த, ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க மாநில அமைச்சருமான ஃபிர்ஹத் ஹக்கீம், மேற்கு வங்காள மக்களை பாஜக முட்டாள்களாக்க முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “குடியுரிமை என்பதற்கு பாஜக என்ன அர்த்தம் வைத்திருக்கிறது? மாதுவாக்கள் இந்திய குடிமக்கள் இல்லையென்றால், ஆண்டுதோறும் நடக்கும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அவர்கள் எவ்வாறு வாக்களித்து வருகிறார்கள்?  மேற்கு வங்காள மக்களை முட்டாள்களாக்குவதை பாஜக நிறுத்த வேண்டும்.” என்று கண்டித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் – பாகிஸ்தான் திரும்பும் இந்து மற்றும் சீக்கிய அகதிகள்

வங்க தேசத்தில் இருந்து வந்த மாதுவாஸ் பழங்குடி இனமக்கள், 1950-களில் மேற்கு வங்கத்திற்குக் குடிபெயரத் தொடங்கியவர்கள். மாநிலத்தில் 30 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்தச் சமூகம், குறைந்தது நான்கு மக்களவை தொகுதிகளிலும், நாடியா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் 30-40 சட்டமன்றத் தொகுதிகளிலும்  வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்