Aran Sei

குளிர்கால ஆடைகளை உள்நாட்டில் தயாரிக்கவேண்டும் – துணை ராணுவ ஜெனரல்

credit : indiatvnews.com

சீனாவிற்கு எதிராக இந்திய ராணுவம் கிழக்கு லடாக்கில் படைகளை வலுப்படுத்தி வரும் நிலையில், துணை தலைமைத் தளபதி லெப்.ஜெனரல் சாய்னி, குளிர்கால சிறப்பு உடைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“அதிக எண்ணிகையில் ராணுவ வீரர்கள் -50டிகிரி வெப்பநிலை இருக்கும் இடங்களுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் நாம் குளிர்கால சிறப்பு ஆடைகளை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். பாதிகாப்பான நாட்டை உருவாக்க உள்நாட்டுமுயற்சி வேண்டும்” என்று போர்கால ஆய்வு மையத்திடம் ஜெனரல் சாய்னி தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிகப்பட்டுள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 20000 அடி உயரத்திற்கு வீரர்களை பணியமர்த்தி பல ஆண்டுகளாக கண்கானித்துவருகிறோம். சீனாவுடன் நடைபெற்று கொண்டிருக்கும் எல்லை பிரச்சனையால் குளிர்காலத்தில் சமாளிக்க தங்குமிடம் மற்றும் சிறப்பு உடைகள் லடாக் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது” என்று ஜெனரல் சாய்னி தெரிவித்துள்ளார்.

“ராணுவ வீரர்களை குறைத்து, மேம்படுத்தப்பட்ட தானியங்கி கருவிகளை உருவாக்க, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கவும் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மின்னணுவியல் கருவிகள் எளிதில் பயங்கரவாதிகளால் கண்டறியப்பட்டு விடுவதால், கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்துவதோடு பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறைக்கு தள்ளபடுகிறோம் என்றும், புதிதான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மட்டுமே நிரந்தர தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

“கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானம் போன்றவையும் புத்தாக்கம் கொண்ட தொழில்நுட்பத்தை கொண்டிருக்கவில்லை. குறைந்த விலை, பன்முக பயன் போன்ற காரணங்களால், இனி திரள் தொழில்நுட்பத்தோடு கூடிய நவீன போர்விமானம் தான் தேவை” என்று லெப்.ஜெனரல் சாய்னி தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்