Aran Sei

உத்தர்காண்ட் பாஜகவில் கலகம் – முதலமைச்சர் மாற்றப்படுவாரா?

Image credit : indiatoday.in

த்தர்காண்ட் மாநிலத்தில் பாஜகவின் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மாற்றப்படுவாரா என்ற நிச்சயமின்மை நிலவுவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

மாநில பாஜக அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் சட்டப் பேரவை உறுப்பினர்களும் திரிவேந்திர சிங் ராவத்தின் வேலை பாணி குறித்து அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து கட்சி மேலிடம் மாநிலத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது என்கிறது இந்தியா டுடே.

இது தொடர்பாக முதலமைச்சர் திரிவேந்திர சிங், நேற்று டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

பாஜக ஆளும் நான்கு மாநிலங்களில் கட்சிக்குள் கலகம் : விபரங்கள்

டெல்லி வந்துள்ள திரிவேந்திர சிங் ராவத், கட்சித் தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்தார் என்றும் உத்தரகாண்ட் நாடாளுமன்றத்தின் பாஜக உறுப்பினர் அனில் பலுனியின் வீட்டுக்கும் சென்றிருக்கிறார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர்காண்ட் இமயமலை அடிவாரத்தில் உள்ள மாநிலம், அதன் மக்கள் தொகை சுமார் 1 கோடி. 2017-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் 70 இடங்களில் 57-ல் பாஜக வெற்றி பெற்ற பிறகு திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

இப்போது, மாநில அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் உட்பட 10 சட்டப் பேரவை உறுப்பினர்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக கட்சியின் மேலிட தகவல்கள் தெரிவித்திருப்பதாக இந்தியா டுடே செய்தி கூறுகிறது.

உத்தர்காண்டுக்குச் சென்று மாநிலத்தின் முக்கியமான பாஜக தலைவர்களை சந்தித்து பேசி விட்டு வந்த பிறகு, பாஜக துணைத் தலைவர் ரமண் சிங், பொதுச் செயலாளர் துஷ்யந்த் சிங் கவுதம் ஆகியோர் கட்சித் தலைவர் ஜே பி நட்டாவிடம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளனர்.

காங்கிரசிலிருந்து பாஜவுக்கு கட்சி தாவியுள்ள பல தலைவர்கள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தின் தலைமை மீது அதிருப்தியுடன் இருப்பதாக இந்தியா டுடே கூறுகிறது. முதலமைச்சர் நீக்கப்படா விட்டால் தாங்கள் பதவி விலகப் போவதாக மேலிட தலைவர்களிடம் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.

உத்தர்காண்ட் தலைவர்களில் ஒரு பிரிவினருக்கு முதலமைச்சருடன் பிரச்சினைகள் இருந்தாலும் தலைமை மாற்றம் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று பாஜகவின் மூத்த கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளதை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்