Aran Sei

ஊதியத்தைக் கேட்ட ஊழியர் அடித்துக் கொலை – பாஜக பிரமுகரின் மகன் மீது கொலை வழக்கு பதிவு

த்திரபிரதேச மாநிலத்தில், ஹோலி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு  இரண்டு மாத ஊதிய பாக்கியை கேட்ட ஊழியரை, பாஜக பிரமுகரின் மகன் அடித்துக் கொன்றுள்ளார்.

கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள பைண்டாபாத் கிராமத்தைச் சேர்ந்த 22 வயத சதேஷ் குமார், அதே மாவட்டத்தில் உள்ள தஹ்லேபூர் கிராமத்தில் வசிக்கும் பாஜகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்வாரிலால் தோஹ்ரேவிடம் வீட்டு வேலை செய்து வருகிறார்.

ஹோலி பண்டிகைக்கு செல்ல வேண்டும் என சதேஷ் குமார் கோரியதால், பன்வாரிலாலின் மகன் அஜீத், வியாழக்கிழமை அவரின் தலையில் துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கியதாக கூறியுள்ள காவல்துறை ஆய்வாளர் விகாஸ் ராய், ”இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” எனக் கூறியுள்ளார்.

அமேசான் நிறுவனத்தில் உருவாகிறதா தொழிற்சங்கம்? – தொழிலாளர்களிடையே இன்று வாக்கெடுப்பு

பன்வாரிலால் வீட்டின் முன்பு, சதேச் குமார் காயத்துடன் படுத்திருப்பதாக, சதேச் குமாரின் உறவினர்களுக்குத் தஹ்லேபூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். சதேச் குமாரின் சொந்த ஊரான பைனாபாத்தில் இருந்து 10கி.மீ. தொலைவில் உள்ள தஹ்லேபூருக்கு அவரது குடும்பத்தினர் வந்து, அவரைக் கன்னோஜ் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவரைக் கான்பூரில் உள்ள லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் “மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்துவிட்டார்” என கன்னோஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் வர்மா கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன்- உச்சநீதிமன்றம் உத்தரவு

சதேச் குமார் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கொலைக் குற்றச்சாட்டில் அஜீத் கைது செய்யப்பட்டுள்ளார் என வர்மா கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பன்வாரிலால் கூறுகையில், ”எனது மகளின் செயல் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நான் அவருடன் வாழ வில்லை; நான் கன்னோஜ் நகரத்தில் வசிக்கிறேன். ஆனால், அந்த வேலைக்காரன் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக என்னிடம் கூறப்பட்டது. முழுமையான விசாரணை மூலமே உண்மையை வெளிப்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.

Source : The Telegraph

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்