Aran Sei

உ.பியில் கொல்லப்பட்ட தலித் சிறுமி – பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என காவல்துறை தகவல்

உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் அக்ரபாத்தில், சந்தேகத்திற்கிடமாக கண்டெடுக்கப்பட்ட தலித் சிறுமியின் உடற்கூறாய்வில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் பாலியல் வல்லுறவுக்கான முயற்சில் கழுத்து நெரிக்கபட்டு மூச்சுத்திணறி அவர் கொல்லப்பட்டிருக்காலம் என காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தேகிப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

16 வயதான அந்த சிறுமி, அக்ராபாத்தில் உள்ள தனது தாய்மாமன் வீட்டில் வசித்து வருகிறார். தினமும் கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க வயலுக்கு சென்றுவருவார் அவ்வாறு கடந்த ஞாயிறு அன்று 11 மணியளவில் கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்றவர், மாலைவரை வீடு திரும்பவில்லை. அதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தார் தேடியபோது வயலுக்கருகில் கழுத்தில் காயத்தோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சடலத்தை கைப்பற்றி காவல் துறையினர் உடல்கூராய்வுக்கு அனுப்ப முயன்ற போது, குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமெனவும், அதுவரை சடலத்தை எடுத்து செல்ல விடமாட்டோம் எனவும் மக்கள் சூழ்ந்து குரலெழுப்பியதாகவும், இதனால் காவல்துறைக்கும் அந்த கிராம மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த பிரியங்கா காந்தி – 144 தடை உத்தரவு பிறப்பித்த உத்திர பிரதேச அரசு

சந்தேகத்திற்குக்கிடமான இந்த மரணம் குறித்து காவல்துறை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302, (கொலை) மற்றும் பிரிவு 376 (பாலியல் வன்புணர்வு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேரையும் கைது செய்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள் அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த காவல்துறை சிறப்பு கால்துறை கண்காணிப்பாளர் (SSP) முனிராஜ், அந்த சிறுமியின் பால் உறுப்பில் எந்தவித காயங்களும் இல்லை என்றும், கழுத்தில் மட்டுமே நெரிக்கபட்டதிற்கான தடயம் உள்ளதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே மூச்சுத்திணறி இறந்திருக்கக்கூடும் என்றும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

திங்கள் (மார்ச் 1) அன்று, இறுதி சடங்குகளுக்காக அந்த சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது. அப்போது அந்த சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டி போராட்டக்காரர்கள் அங்கு திரண்டதால் ஆக்ரா செல்லும் சாலையில் சில மணிநேரம் போக்குவரத்து தடைபட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு சில வாரங்கள் முன்பு தான் உத்தர பிரதேச மாநிலம் உன்னோ பகுதியில் மூன்று சிறுமிகள் விஷம் கொடுக்கப்பட்டு வயல்வெளியில், கண்டெடுக்கப்பட்டார்கள் என்பதும் அதில் இருவர் உயிரியிழந்த நிலையில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்