Aran Sei

பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றிய 1600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு – உத்திரபிரதேச ஆசிரியர் சங்கம் தகவல்

த்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றிய 1621 ஆசிரியர்கள் மற்றும் துணை ஊழியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக, உத்திரபிரதேச ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி கேட்டு முதலமைச்சருக்கும் அனுப்பியிருக்கும் உயிரிழந்தவர்கள் பட்டியலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதிவரை 706 பேர் உயிரிழந்திருந்ததாக ஆசிரியர் சங்கம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது இரு மடங்காகியுள்ளது.

‘பாலஸ்தீனர்கள் படுகொலைக்கு கூட்டாளியாக மாட்டோம்’ – இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கப்பலில் ஏற்ற மறுத்த துறைமுக தொழிலாளர்கள்

மே 16 ஆம் தேதி ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், ”உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பிடு வழங்க வேண்டும் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “உயிரிழந்தவர்கள் பெயர், அவர்கள் பணிபுரிந்த பள்ளி, அவர்கள் பதவி, மாவட்டத்தின் பெயர், உயிரிழந்த தேதி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தொலைபேசி எண்கள்” ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

”கொரோனா தொற்றால் வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்ததை அடுத்து, ஆசிரியர்கள் பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா வழிகாட்டுதல் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், அவை முறையாக பின்பற்றவில்லை” என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா முதல் அலையின்போது ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 76 கோடி ரூபாய் நிதி வழங்கியதை சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள் உயிரிழப்பு தொடர்பாக உத்திரபிரதேச கல்வித்துறை அதிகாரிகளோ, உத்திர பிரதேச நிர்வாகமோ, உத்திரபிரதேச அரசு பிரதிநிதிகளோ இதுவரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என குற்றசாட்டியுள்ளனர்.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்