Aran Sei

உ.பி: புதிய மதரஸாக்களுக்கு நிதி உதவி நிறுத்தம்: இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

த்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, புதிய மதரஸாக்களுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்தியுள்ளது. இதற்கு மாநிலத்தில் உள்ள மவுலானாக்களும், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியாவிலேயே அதிகளவிலான மதரஸாக்கள் உத்திரபிரதேசத்தில் தான் உள்ளது. அதில் அரசு அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் 14,461 உள்ளன. இதில் மாநில அரசின் நிதியை 558 மதரஸாக்கள் பெற்று வந்துள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே அரசு நிதி பெறும் மதரஸாக்களுக்கு இந்த உதவி தொடரும். புதிய மதரஸாக்களுக்கு இந்த நிதி அளிக்கப்பட மாட்டாது என்று அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் மீண்டும் ஆட்சிக்கு வந்த யோகி அரசின் அமைச்சரவையில் சிறுபான்மை துறை அமைச்சராக உள்ள தானிஷ் அப்சல் அன்சாரி தெரிவித்துள்ளார்.

பகவத் கீதை, ராமாயணத்தை கட்டாயமாக்கும் புதிய கல்வி கொள்கை – எதிர்ப்பு தெரிவிக்கும் உத்திரபிரதேச மதராஸாக்கள்

உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமியர்களில் சுமார் 25 விழுக்காட்டினர் மதரஸாக்களில் படிக்கின்றனர். எனவே, மாநில அரசின் இம்முடிவிற்கு அதன் மவுலானாக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜமாய்த் உல் முஸ்லிமின் அமைப்பின் மவுலானா காரி இஷாக் கோரா கூறும்போது, ‘இந்த நிதி உதவி நிறுத்தம் ஏன்? என மாநில அரசு விளக்க வேண்டும். இவர்களிடம் மதரஸாக்களுக்கு அளிக்க மட்டும் நிதி இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்களுக்குப் பொதுமக்களிடம் இருந்து நிதி கிடைப்பதால் அரசின் நிதி உதவி தேவையில்லை. இருப்பினும் நிதி உதவி நிறுத்தம் என்பது மாநில அரசின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது’ என்று மவுலானா அசத் காஸ்மி தெரிவித்துள்ளார்.

Source :  The Hindu Tamil 

ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்