உத்தர பிரதேசத்தின் ராம்பூர், பிலிபித், மொராதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், செவ்வாய்க் கிழமை அன்று, ராம்பூர்-மொராதாபாத் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை 24-ல் கூடியுள்ளனர். அவர்களை டெல்லி நோக்கிச் செல்ல விடாமல் போலீஸ் தடுத்ததாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது.
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசம் – போராடும் விவசாயத் தலைவர்களுக்கு ரூ 50 லட்சம் நோட்டீஸ்
பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் படையினருக்கு மத்தியில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் நெடுஞ்சாலையை மறியல் செய்து போராட்டம் நடத்தினர்.
“அமைதியாக போராடும் உரிமை விவசாயிகளுக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறியுள்ளது. எனவே, உத்தர பிரதேச போலீஸ் ஏன் அவர்களை டெல்லிக்குச் செல்ல விடாமல் தடுத்தது என்று தி வயர் கேள்வி எழுப்பியுள்ளது.
” போராடுவது அடிப்படை உரிமை, கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது” – உச்சநீதிமன்றம்
“விவசாயிகளின் போராடும் உரிமையை உறுதி செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உத்தர பிரதேச போலீஸ் 2,000 விவசாயிகளை மொராதாபாதில் நிறுத்தியுள்ளது” என்று rkhuria2 என்பவர் ஒரு வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.
Violating SC directive that farmers have a right to protest, UP Police stops 2000 Farmers at Moradabad. pic.twitter.com/XQA1IRNH8H
— rkhuria2 (@rkhuria2) December 22, 2020
போராட்டத்தில் 2000 விவசாயிகள் இணைந்துள்ளதாகவும், 600 டிராக்டர்களுடன் அவர் வந்திருப்பதாகவும் வீடியோவில் பேசுபவர் கூறுகிறார். அவர்களை தடுப்பதற்கு 4000 போலீசார் அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
போராட்டக்காரர்களின் எண்ணிக்கை போலீஸ்காரர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக மொராதாபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
காங்கிரசைச் சேர்ந்த சஜ்ஜத் அகமது கான் ட்வீட் செய்த வீடியோவில், டொயோட்டா இன்னோவா காரில் போராட்ட களத்திலிருந்து போக முயன்ற போலீஸ் அதிகாரியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதாக காட்டப்பட்டுள்ளது.
Scene from Delhi-Lucknow highway near Rampur and Moradabad. Agitated farmers attack police vechile after they were allegedly stopped by police. A senior cop seen running for reinforcements after the van was attacked and had to retreat. @Uppolice
— Sajjad Ahmad Khan INC (@SajjadA06226593) December 22, 2020
தேசிய நெடுஞ்சாலை 24, டெல்லியையும் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவையும் காசிப்பூர் வழியாக இணைக்கிறது. காசிப்பூரில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஒன்றிய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, 3 வாரங்களாக தங்கி போராடுகின்றனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.