Aran Sei

அயோத்தி ராமர் தரிசனம் எப்போது – யோகி ஆதித்யநாத் விளக்கம்

கொரோனா முடிந்த பின் மக்கள் அயோத்தி ராமரை தரிசனம் செய்யலாம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் லாலாபூரில் உள்ள வால்மீகி ஆசிரமத்திற்கு மஹரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகிராம் ஆதித்யநாத் வருகை தந்துள்ளார்.

இந்து மதத்தில் இருந்து வெளியேறிய உ.பி-யின் வால்மீகி மக்கள்

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில். “இப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை, கொரோனா தொற்று பரவால் இருந்திருந்தால், எல்லா கிராமங்களிலும் உள்ள மக்களையும் அயோத்தி ராமர் கோயில் தரிசிக்க ஏற்பாடு செய்திருப்போம்.” என்று கூறியுள்ளதாக ‘தி இந்து’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், “கொரோனா பரவல் முடிவடைந்த பின், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு மாநிலத்தில் உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்து தரிசனம் செய்யும் படியான ஏற்பாடுகள் உடனே செய்யப்படும்.” என்று உறுதியளித்துள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது .

’குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார் யோகி ஆதித்யநாத்’: பிரியங்கா காந்தி சாடல்

 

உபி-யில் நவம்பர் 3 ஆம் தேதி பங்கர்மாவு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி இடைத்தேர்தலின் ஒரு பகுதியாகப் பிரச்சாரப் பேரணியில் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், ”பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.” என்று கண்டித்துள்ளதாக ‘தி இந்து’ கூறியுள்ளது .

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

மேலும், “பசுக்களைப் பாதுகாக்கவும், உணவளிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் காப்பகங்கள் கட்டப்படவுள்ளன. இதற்காக மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக ’தி இந்து’ தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்