உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெண்களின் பாதுகாப்புக்காக ‘மிஷன் சக்தி’ என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த ஆறு மாதக் காலத் திட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு குறித்து அமைச்சர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Balrampur: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath attends the launch of "Mission Shakti" programme for women security in Uttar Pradesh.
Young girls demonstrate self-defence techniques during the event pic.twitter.com/VzJbSL5yim
— ANI UP (@ANINewsUP) October 17, 2020
பெண்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் மாநிலத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 521 தொகுதிகள், 59,000 கிராமப் பஞ்சாயத்துகள், 630 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 1,535 காவல் நிலையங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
”நவராத்திரியின் முதல் நாள் மிஷன் சக்தி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சார இயக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் உதவும்.” என ட்விட்டரில் யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.
शक्ति की आराधना के पावन अवसर 'शारदीय नवरात्रि' के प्रथम दिवस से प्रदेश में 'मिशन शक्ति' का शुभारंभ किया जा रहा है।
यह अभियान महिलाओं और बच्चों के प्रति सम्मान तथा सुरक्षा की भावना के प्रसार तथा महिला स्वावलंबन की आवश्यकता को नवीन आयाम प्रदान करने में सहयोगी होगा।#MissionShakti
— Yogi Adityanath (@myogiadityanath) October 17, 2020
தொடர்ந்து, ”மாநிலத்தின் ஒவ்வொரு பெண்ணின் மரியாதையையும் தன்னம்பிக்கையையும் பலப்படுத்த உங்களுடைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.”
आपकी सरकार प्रदेश की हर बेटी-हर महिला का सम्मान सुनिश्चित करने के साथ-साथ उनके स्वावलंबन के लिए प्रतिबद्ध है।
जो लोग नारी गरिमा और स्वाभिमान को दुष्प्रभावित करने की कोशिश करेंगे, उनके लिए 'नए उत्तर प्रदेश' की धरती पर कोई जगह नहीं है।
ऐसे लोगों की दुर्गति तय है।#MissionShakti
— Yogi Adityanath (@myogiadityanath) October 17, 2020
“பெண்களின் கண்ணியத்திற்கும் சுயமரியாதைக்கும் தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு ‘புதிய உத்தரப்பிரதேசத்தில்’ இடமில்லை.” எனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில், ”கடந்த ஒரு வாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக 13 கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. தகவல்களின்படி 4 சம்பவங்களில், பாதிக்கப்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
यूपी में पिछले एक हफ्ते में महिलाओं के खिलाफ अपराध की 13 भयावह घटनाएं घटी। खबरों के अनुसार 4 घटनाओं में पीड़िता की हत्या कर दी गई या पीड़िताओं ने आत्महत्या कर ली।
महिला सुरक्षा की ये दुर्गति विचलित करती है। सीएम साहब को इसपर ‘स्पेशल सेशन’ करने का समय नहीं, हाँ फोटोसेशन चालू है। pic.twitter.com/FDW9NppDmI
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 16, 2020
உ.பி.மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.
பெற்றோர் அனுமதியின்றி இறந்த உடலுக்கு இரவோடு இரவாக உத்தரப்பிரதேசக் காவலர்கள் எரியூட்டி உள்ளார்கள். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம், உத்தரப்பிரதேசக் காவலர்களின் செயலை “மனித உரிமை மீறல்” என்று குற்றம் சாட்டியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.